Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இஞ்சி தயிர் பச்சடி செஞ்சு குடுங்க.... பிடிக்காதவங்களும் சாப்பிடுவாங்க!

இஞ்சி தயிர் பச்சடி செஞ்சு குடுங்க…. பிடிக்காதவங்களும் சாப்பிடுவாங்க!

-

இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படி?

இஞ்சி தயிர் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:இஞ்சி தயிர் பச்சடி செஞ்சு குடுங்க.... பிடிக்காதவங்களும் சாப்பிடுவாங்க!

இஞ்சி – 50 கிராம்
தேங்காய் – 1/2 மூடி
தயிர் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1/2 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

இஞ்சி தயிர் பச்சடி செய்வதற்கு முதலில் இஞ்சியை கழுவி சுத்தம் செய்து அதன் தோலை சீவி வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.இஞ்சி தயிர் பச்சடி செஞ்சு குடுங்க.... பிடிக்காதவங்களும் சாப்பிடுவாங்க!

இப்போது இஞ்சி, தேங்காய் துருவல், பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்த விழுதை சேர்த்து அதில் உப்பு, தயிர் ஆகிவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதைத்தொடர்ந்து ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும். தாளித்தவற்றை தயிர் கலவையில் சேர்த்து கிளறி விட வேண்டும். தேவைப்பட்டால் கொத்தமல்லி தழைகளை தூவி கொள்ளலாம்.

இப்போது அருமையான இஞ்சி தயிர் பச்சடி தயார்.இஞ்சி தயிர் பச்சடி செஞ்சு குடுங்க.... பிடிக்காதவங்களும் சாப்பிடுவாங்க!

தேநீர் முதல் பிரியாணி வரை நாம் பயன்படுத்தும் இஞ்சியில் பலவிதமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. குறிப்பாக இது சளி, இருமலை போக்கும் நல்ல நிவாரணம் தரும். எனவே இஞ்சியில் இது போல் பச்சடி செய்து சாப்பிட்டால் இஞ்சியை விரும்பாதவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

MUST READ