Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்காஜு ஆப்பிள் செய்வது எப்படி?

காஜு ஆப்பிள் செய்வது எப்படி?

-

காஜு ஆப்பிள் செய்ய தேவையான பொருட்கள்:

முந்திரிப் பருப்பு – ஒரு கப்
சர்க்கரை – அரை கப்
தண்ணீர் – கால் கப்
நெய் – ஒரு ஸ்பூன்
கிராம்பு – தேவையான அளவு
மஞ்சள் ஃபுட் கலர் – 2 துளி
சிவப்பு ஃபுட் கலர் – 2 துளி
சிறிய பெயிண்ட் பிரஸ் – 1

செய்முறை: காஜு ஆப்பிள் செய்வது எப்படி?

காஜு ஆப்பிள் செய்ய முதலில் முந்திரிப் பருப்பை மிக்ஸியில் நன்கு அரைத்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் சர்க்கரை கலந்து கம்பி பதம் வரும் வரை பாகு போன்று காய்ச்ச வேண்டும்.

அதன் பிறகு சர்க்கரை பாகில் சிறிது சிறிதாக பொடித்து வைத்துள்ள முந்திரி பருப்பை சேர்த்து கைவிடாமல் கிளறி விட வேண்டும்.

சில நிமிடங்களிலேயே கலவை நன்றாக சுருண்டு வந்துவிடும். இப்போது சிறிதளவு மாவை எடுத்து விரல்களால் உருட்டி பார்க்க உருட்ட வரும். அப்படி உருட்ட வந்தால் தான் அது சரியான பதம் என்று அர்த்தம்.

இச் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவிய தட்டில் பரப்பி ஆற வைக்க வேண்டும். பின் இந்த கலவை கை பொறுக்கும் சூட்டுக்கு வந்த பின்னர் கையில் நெய் தடவிக் கொண்டு மஞ்சள் ஃபுட் கலர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

அதன் பின் சிறிய உருண்டைகளாக ஆப்பிள் வடிவத்தில் உருட்ட வேண்டும்.காஜு ஆப்பிள் செய்வது எப்படி?

இப்போது பிரஷை வைத்து சிவப்பு நிற புட் கலரை ஆங்காங்கே மேலே தடவி காய விட வேண்டும்.

கடைசியாக உருண்டைகளின் நடுவில் சிறிய பள்ளம் செய்து கிராம்பை தலைகீழாக சொருகி பரிமாற வேண்டும்.

MUST READ