Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கரிசலாங்கண்ணி துவையல் செய்வது எப்படி?

கரிசலாங்கண்ணி துவையல் செய்வது எப்படி?

-

- Advertisement -

கரிசலாங்கண்ணி துவையல் செய்ய தேவையான பொருட்கள்:

கரிசலாங்கண்ணி கீரை – ஒரு கட்டு
மிளகாய் வற்றல் – 7
எலுமிச்சை சாறு – 2
நெய் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:
கடுகு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
மிளகாய் வற்றல் – 2கரிசலாங்கண்ணி துவையல் செய்வது எப்படி?

கரிசலாங்கண்ணி துவையல் செய்யும் முறை:

கரிசலாங்கண்ணி துவையல் செய்ய முதலில் கீரையை நன்கு சுத்தம் செய்து அதனை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கிய கீரையை உலர வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு கடாயில் நெய் விட்டு உலர்த்திய கீரைகளை சேர்த்து வதக்க வேண்டும்.

அதன்பின் 7 மிளகாய் வற்றலை கிள்ளி போட்டு தனியாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது வதக்கி வைத்த கீரை, வறுத்த மிளகாய் வற்றல், தேவையான அளவு உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் மற்றொரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, 2 மிளகாய் வற்றல் சேர்த்து தாளித்து துவையலுடன் சேர்த்து கலக்க வேண்டும்.கரிசலாங்கண்ணி துவையல் செய்வது எப்படி?

இப்போது கரிசலாங்கண்ணி துவையல் தயார். இதனை தொடர்ந்து 45 நாட்கள் சாப்பிட்டு வர ரத்த சோகை குணமடையும். மேலும் தலை முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.

MUST READ