Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நாரத்தை இலை ரசம் செய்வது எப்படி?

நாரத்தை இலை ரசம் செய்வது எப்படி?

-

நாரத்தை ரசம் செய்ய தேவையான பொருட்கள்:நாரத்தை இலை ரசம் செய்வது எப்படி?

நாரத்தை இலை- 2 கப்
துவரம் பருப்பு – 5 ஸ்பூன்
தக்காளி- 2
கடுகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
மிளகு – சிறிதளவு
வரமிளகாய் – 4
புளி – நெல்லிக்காய் அளவு
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

நாரத்தை இலை ரசம் செய்ய முதலில் நாரத்தை இலைகளை நன்கு கழுவி பொடிப்பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக துவரம் பருப்பை வேகவைத்து அதனுடன் தக்காளியையும் சேர்த்து மசித்து கொள்ள வேண்டும். அதே சமயம் ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கரைத்து அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.நாரத்தை இலை ரசம் செய்வது எப்படி?

இப்போது மிளகு கொத்தமல்லி, சீரகம் வரமிளகாய் ஆகியவற்றை இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் அந்த பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு இடித்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து கிளற வேண்டும். அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து, பின் மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு மற்றும் தக்காளி ஆகியவற்றையும் சேர்த்து கலந்து விட வேண்டும்.

அதன் பின் வடிகட்டிய புளிக்கரைசலை ஊற்ற வேண்டும்.நாரத்தை இலை ரசம் செய்வது எப்படி?

மேலும் நறுக்கி வைத்துள்ள நாரத்தை இலைகளை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

இப்போது மணம் மிகுந்த நாரத்தை இலை ரசம் தயார்.

MUST READ