குழந்தைகள் பலரும் நூடுல்ஸ் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் கடைகளில் விற்கும் நூடுல்ஸ் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுப்பதில்லை. அதனால் தற்போது தானிய வகைகளில் ஒன்றான சாமை அரிசியில் நூடுல்ஸ் செய்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சாமை அரிசி – 5 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
குடைமிளகாய் – 2
பச்சை மிளகாய் – 3
முட்டைக்கோஸ் – சிறிதளவு
கரம் மசாலா பொடி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் தூள் – தேவையான அளவு
மிளகாய் தூள் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயம், தக்காளி, முட்டைகோஸ், பச்சை மிளகாய், குடைமிளகாய் ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
சாமை அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைக்கும் போதே அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். பின் கடாயில், மாவினை ஊற்றி, அதில் எண்ணெய் ஊற்றி கிளறி விட வேண்டும்.
பிறகு மாவு, நிறம் மாறி கையில் ஒட்டாமல் பந்து போன்று வந்த பிறகு இறக்கி விட வேண்டும்.
அதனை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதேசமயம் சூடாக இருக்கும் போதே இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, அதில் பொடிப்பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், முட்டைக்கோஸ், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
காய்கறிகள் நன்கு வந்த பிறகு அதில் சிறிது கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, பிழிந்து வைத்திருக்கும் சாமையை போட்டு கிளறி விட வேண்டும்.
சேர்த்துள்ள மசாலாக்களில் வாசனை போன பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
இப்போது சுவையான சாமை நூடுல்ஸ் ரெடி.