மசாலா இட்லி செய்ய தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – ஒரு கப்
தக்காளி – 1
சின்ன வெங்காயம் – 4
பச்சை பட்டாணி – அரை கப்
உளுந்து – சிறிதளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு
தேங்காய் – சிறிதளவு
மிளகாய் தூள் – 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேங்காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மேலும் பச்சை பட்டாணியை இரண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து சேர்த்து, சிறிது நேரம் கழித்து வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கி பொன்னிறமாக மாறியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
தக்காளி நன்கு வதங்கிய பின் அரைத்து வைத்த கலவையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
அதன் பின் பட்டாணியை சேர்க்க வேண்டும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கி ஆற வைக்க வேண்டும்.
ஆறிய பின் இட்லி மாவில் சேர்த்து கலக்க வேண்டும். அதன் பின் இட்லி பாத்திரத்தில் மாவினை ஊற்றி வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது அருமையான மசாலா இட்லி தயார்.