Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்முள்ளு முறுக்கு செய்வது எப்படி?

முள்ளு முறுக்கு செய்வது எப்படி?

-

பண்டிகை காலங்களில் பலகாரங்கள் செய்வது வழக்கம். அதில் குறிப்பாக முறுக்கு வகைகள் கட்டாயம் இடம்பெறும். முறுக்குகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவற்றில் முள்ளு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.முள்ளு முறுக்கு செய்வது எப்படி?தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 6 கப்
கடலைப்பருப்பு – 2 கப்
பயத்தம் பருப்பு – அரை கப்
எள் – ஒரு தேக்கரண்டி
சீரகம் – ஒரு
வெண்ணெய் – 2 தேக்கரண்டி
கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

முள்ளு முறுக்கு செய்ய முதலில் பச்சரிசி, கடலைப்பருப்பு, பயத்தம் பருப்பு ஆகியவற்றை நன்கு கழுவி சுத்தம் செய்து காய வைக்க வேண்டும்.

நன்கு காய்ந்த கடலை பருப்பு, பயத்தம் பருப்பு, பச்சரிசி ஆகிய மூன்றையும் மாவாக அரைத்துக் கொள்ளவும்.

சிறிதளவு தண்ணீரில் உப்பு மற்றும் பெருங்காயத்தை போட்டு கரைத்து, அரைத்து வைத்த மாவில் சேர்த்து கலக்க வேண்டும்.முள்ளு முறுக்கு செய்வது எப்படி?

வெண்ணெய், எள், சீரகம் முதலியவற்றுடன் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் முள் முறுக்கு அச்சில் பிசைந்து வைத்துள்ள மாவை சேர்த்து, சூடான எண்ணெயில் பொழிந்து பொரித்து எடுக்க வேண்டும்.

மீதமுள்ள மாவையும் இதுபோன்று பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான முள் முறுக்கு தயார்.

MUST READ