Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் கட்லெட் செய்வது எப்படி?

உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் கட்லெட் செய்வது எப்படி?

-

ஓட்ஸ் கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் கட்லெட் செய்வது எப்படி?

ஓட்ஸ் – ஒரு கப்
உருளைக்கிழங்கு – 2
காலிஃப்ளவர் –
1/4 கப்
பீன்ஸ் – 1/4 கப்
கேரட் – 2
மிளகாய் தூள் – தேவையான அளவு
கொத்தமல்லி – 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
பிரட் கிரம்ஸ் – 1/ 4 கப்

செய்முறை

ஓட்ஸ் கட்லெட் செய்ய முதலில் கேரட்டை துருவி வைத்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் கட்லெட் செய்வது எப்படி?

இப்போது ஒரு கடாயில் ஓட்ஸ் சேர்த்து அதனை வறுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அதை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு அத்துடன் வசித்து வைத்த உருளைக்கிழங்கு காலிபிளவர், கேரட், பீன்ஸ், மிளகாய் தூள், கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இசைந்த பின் அதன் மேல் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.

பத்து நிமிடங்கள் கழித்து விருப்பப்பட்ட வடிவில் மாவை பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பில் தவாவை வைத்து அதில் எண்ணெய் தடவி பிரட் தூளில் மாவினை பிரட்டி, அதை அப்படியே தவாவில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக மாறும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும்.உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் கட்லெட் செய்வது எப்படி?

இப்போது அருமையான ஓட்ஸ் கட்லெட் தயார்.

ஓட்ஸ் என்பது நம் உடல் எடையை குறைக்க உதவுவதால் இதுபோன்று கட்லெட்டும் செய்து சாப்பிடலாம்.

MUST READ