தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு தோல் – ஒரு கப்
புளி – சிறிய எலுமிச்சம் பழம் அளவு
மிளகாய் தூள் – காரத்திற்கேற்ப
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 4லிருந்து 5 டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
வெல்லம் – சிறிய அளவு
உப்பு – தேவைக்கு ஏற்ப
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை:
ஆரஞ்சு பழத்தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின் வேக வைத்த தோலுடன் புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரே கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் கறிவேப்பிலையை போட்டு தாளிக்கவும். அதன் பின் சிறு தீயில் மிளகாய்த்தூள் மற்றும் பெருங்காயத்தூளை சேர்த்து கலக்கவும். பிறகு அரைத்த ஆரஞ்சு விழுது கலவையை போட்டு கலக்கவும். பின் சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும். அத்துடன் வெல்லத்தை உடைத்து தூளாக போட்டு கலக்கவும். கெட்டியாக ஒட்டாத பதமாக எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு தீயை அணைத்து விடவும். டேஸ்டான ஆரஞ்சு பழத் தொக்கு ரெடி.இந்த ஆரஞ்சு பழத் தோல்களை நிறைய பேர் மருத்துவத்திற்காக பயன்படுத்துவதுண்டு. ஆரஞ்சு பழத்தோலை காய வைத்து பொடி செய்து முகத்தில் தேய்த்து குளித்து வரலாம்.
இந்த ஆரஞ்சு பழத் தோலானது உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றி ரத்தக்குழாய்களில் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதில் இருக்கும் வேதிப்பொருட்கள் நெஞ்செரிச்சலில் இருந்து விடுபட உதவுகிறது. மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது.