Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்குழந்தைகள் விரும்பும் பீனட் பட்டர் செய்வது எப்படி?

குழந்தைகள் விரும்பும் பீனட் பட்டர் செய்வது எப்படி?

-

- Advertisement -

பீனட் பட்டர் செய்ய தேவையான பொருட்கள்:

குழந்தைகள் விரும்பும் பீனட் பட்டர் செய்வது எப்படி?வேர்க்கடலை – ஒரு கப்
சமையல் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
தேன் – ஒரு தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி

செய்முறை:

பீனட் பட்டர் செய்வதற்கு முதலில் ஒரு கடாயில் வேர்க்கடலையை சேர்த்து மிதமான தீயில் வறுத்து தோலை நீக்கிக் கொள்ள வேண்டும்.

பின் வேர்க்கடலையை ஆற வைத்து அதனை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.

வேர்க்கடலையில் எண்ணெய் இருப்பதனால் மிக்ஸி ஜாரின் ஓரங்களில் வேர்க்கடலை பேஸ்ட் ஒட்டிக் கொண்டிருக்கும்.குழந்தைகள் விரும்பும் பீனட் பட்டர் செய்வது எப்படி?

ஒட்டிக் கொண்டிருக்கும் வேர்க்கடலை பேஸ்டுடன் சமையல் எண்ணெய், உப்பு, தேன் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்து பொருட்களும் அரைபட்டு வழவழப்பான பேஸ்ட்டாக கிடைக்கும். இப்போது பீனட் பட்டர் தயார். இதனை நன்கு கழுவி சுத்தம் செய்யப்பட்ட ஒரு பாட்டிலில் அடைத்து பயன்படுத்தலாம்.குழந்தைகள் விரும்பும் பீனட் பட்டர் செய்வது எப்படி?இந்த பீனட் பட்டரை குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் பிரட்டில் தடவி கொடுக்கலாம். வேர்க்கடலையில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளை பலப்படுத்தவும் எலும்புத் துளை நோய் ஏற்படாமல் தடுக்கவும் இது உதவுகிறது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பீனட் பட்டரை சாப்பிடலாம்.

MUST READ