Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வேர்க்கடலை வெல்ல லட்டு செய்வது எப்படி?

வேர்க்கடலை வெல்ல லட்டு செய்வது எப்படி?

-

வேர்க்கடலை வெல்ல லட்டு செய்ய தேவையான பொருட்கள்:

தோல் நீக்கிய வேர்க்கடலை – 1 கப்
வெல்லம் – 1 கப்
பாதாம் – 20
ஏலக்காய் – 3

செய்முறைவேர்க்கடலை வெல்ல லட்டு செய்வது எப்படி?

வேர்க்கடலை வெல்ல லட்டு செய்ய முதலில் வேர்கடலையை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் வெல்லத்தைப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாதாமை துருவி வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது தோல் நீக்கி வைத்திருக்கும் வேர்க்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு அதனை அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பொடித்த வெல்லம், துருவி வைத்திருக்கும் பாதாம் ஆகியவற்றையும் அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அரைத்த விதை ஒரு தட்டில் கொட்டி விடவேண்டும். அடுத்ததாக ஏலக்காயை பொடி செய்து அரைத்து வைத்துள்ள கலவையில் கலந்து விட வேண்டும்.

இப்போது அரைத்து வைத்திருக்கும் மாவை லட்டுகளாக விருப்பமான வடிவத்தில் பிடித்தால் அருமையான வேர்கடலை வெல்ல லட்டு தயார்.வேர்க்கடலை வெல்ல லட்டு செய்வது எப்படி?

வேர்க்கடலை என்பது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் தீர்வாக பயன்படுகிறது. மேலும் இது நீரழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரவும் புற்றுநோயை தடுக்கவும் உதவுகிறது. எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வேர்க்கடலை வெல்ல லட்டை சாப்பிடலாம். ஆனால் எதையும் அளவாக சாப்பிடுவதே நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

MUST READ