Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பரங்கிக்காய் அல்வா செய்து பார்க்கலாம் வாங்க!

பரங்கிக்காய் அல்வா செய்து பார்க்கலாம் வாங்க!

-

- Advertisement -

பரங்கிக்காய் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

பரங்கிக்காய் – 2 கப்பரங்கிக்காய் அல்வா செய்து பார்க்கலாம் வாங்க!
வெல்லம் – 3/4 கப்
பால் – 1/2 கப்
நெய் – 4 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 10
பரங்கி விதை – சிறிதளவு
காய்ந்த திராட்சை – ஒரு கைப்பிடி அளவு
ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்பரங்கிக்காய் அல்வா செய்து பார்க்கலாம் வாங்க!

செய்முறை

முதலில் ஒரு பெரிய பரங்கிக்காய் துண்டை எடுத்து தோல் மற்றும் விதைகளை நீக்கி அதனை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் வெல்லத்தைப் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முந்திரி பருப்பு, திராட்சை ஆகியவற்றை வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே பாத்திரத்தில் மீண்டும் நெய் சேர்த்து பரங்கிக்காய் துருவலை போட்டு வதக்க வேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைத்து பத்து நிமிடங்கள் வரை வதக்க வேண்டும்.பரங்கிக்காய் அல்வா செய்து பார்க்கலாம் வாங்க!

அதன் பின் பால் சேர்த்து மூடி போட்டு வேக வைக்க வேண்டும். பால் முழுவதும் வ பரங்கிக்காய் வெந்து வந்த பிறகு பொடித்து வைத்துள்ள வெல்லத்தை சேர்க்க வேண்டும்.

வெல்லம் நன்றாக கலந்து அல்வா பதத்திற்கு வருவதற்கு 15 நிமிடங்கள் ஆகும். அப்போது இடையிடையில் சிறிதளவு நெய் சேர்த்து கிளறிவிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.பரங்கிக்காய் அல்வா செய்து பார்க்கலாம் வாங்க!

கடைசியாக வருத்த முந்திரி திராட்சை ஆகியவற்றை சேர்த்து கிளறி ஏலக்காய் தூளையும் போட்டு கிளறி அடுப்பை அணைத்து விட வேண்டும். அல்வாவை பரிமாறும் போது பரங்கி விதைகளை தூவி பரிமாற வேண்டும்.

இப்போது அருமையான சுவையில் அட்டகாசமான பரங்கிக்காய் அல்வா தயார்.

MUST READ