Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வீடே மணக்கும் மாங்காய் ரசம்.... நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

வீடே மணக்கும் மாங்காய் ரசம்…. நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

-

மாங்காய் ரசம் செய்வது எப்படி?

மாங்காய் ரசம் செய்ய தேவையான பொருட்கள் :வீடே மணக்கும் மாங்காய் ரசம்.... நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

புளிப்பு மாங்காய் – 1/4 பகுதி

துவரம் பருப்பு – 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:

மிளகு, சீரகம் – தலா 1 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 2

தாளிக்க தேவையான பொருட்கள்:

கடுகு – 1/2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 3
பெருங்காயத்தூள் – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1
கொத்தமல்லி – சிறிதளவு
நெய் – 2 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவுவீடே மணக்கும் மாங்காய் ரசம்.... நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

செய்முறை:

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் மாங்காயை கழுவி சுத்தம் செய்து தோல் சீவி பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மாங்காயை தண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு வெந்ததும் தட்டில் ஆற வைத்து விட வேண்டும்.

இப்போது குக்கரில் துவரம் பருப்பு, மஞ்சள் தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து பருப்பு குழைந்து வரும் வரை வேக வைக்க வேண்டும்.

அடுத்ததாக மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், பூண்டு, மிளகு, சீரகம் ஆகிஎவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு வேக வைத்த மாங்காயுடன் வேக வைத்த துவரம் பருப்பினை இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

அடுத்ததாக அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் நெய், எண்ணெய் சேர்த்து கடுகு, மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு தாளித்து அரைத்து வைத்த பூண்டு, மிளகு கலவையை சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கலக்க வேண்டும். அதைத் தொடர்ந்து மாங்காய் விழுது, தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும்.வீடே மணக்கும் மாங்காய் ரசம்.... நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

கொதித்த பின் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து ஒரு கொதி வந்தபின் அடுப்பை அணைத்து விட வேண்டும். கடைசியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்கி அத்துடன் ஒரு ஸ்பூன் அளவு நெய் சேர்த்து பரிமாற வேண்டும்.

வீடே மணக்கும் மாங்காய் ரசம் தயார் நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

MUST READ