தானிய வகைகள் அனைத்தும் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. அந்த காலத்தில் நம் முன்னோர்கள் தானிய வகைகளை எடுத்துக்கொண்டதால்தான் நூறு வயதிற்கும் மேல் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். எனவே நாமும் இதுபோன்ற தானிய வகைகளை பயன்படுத்த தொடங்கினால் ஆரோக்கியமாக வாழலாம். தற்போது தானிய வகைகளில் ஒன்றான சாமையில் கீர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சாமை கீர் செய்ய தேவையான பொருட்கள்
சாமை அரிசி – 1 கப்
பால் – 2 கப்
பால்கோவா – அரை கப்
சர்க்கரை – கால் கப்
மில்க் மெய்ட் – 2 ஸ்பூன்
நெய் – 3 ஸ்பூன்
முந்திரி – 5
பிஸ்தா – 5
பாதாம் – 5
ஏலக்காய் – 2
செய்முறை:
சாமை கீர் செய்ய முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி, பாதாம், பிஸ்தா, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம் மற்றொரு கடாயில் சாமை அரிசியை போட்டு நன்கு சிவக்கும் வரை வறுக்க வேண்டும்.
அதன் பிறகு சாமை அரிசியில் 2 கப் அளவு பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும். ஒரு கொதி வந்தபின் அதில் சர்க்கரை, பால்கோவா, மில்க் மெய்ட் ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும். அதை தொடர்ந்து வறுத்து வைத்திருக்கும் நட்ஸ் வகைகளையும் சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும். (குறிப்பு: நட்ஸ் வகைகளை லேசாக இடித்தும் சேர்த்துக் கொள்ளலாம்)
இப்போது உடலுக்கு ஆரோக்கியம் தரும் சுவையான சாமை கீர் தயார். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.