Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மொறு மொறுன்னு சேப்பக்கிழங்கு ரோஸ்ட் செஞ்சு பார்க்கலாமா?

மொறு மொறுன்னு சேப்பக்கிழங்கு ரோஸ்ட் செஞ்சு பார்க்கலாமா?

-

சேப்பக்கிழங்கு என்பது வழவழப்பான தன்மை கொண்டது. இதில் கால்சியம் சத்து பாஸ்பரஸ், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் இ போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. தற்போது சேப்பக்கிழங்கில் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்:

சேப்பக்கிழங்கு- கால் கிலோ
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவுமொறு மொறுன்னு சேப்பக்கிழங்கு ரோஸ்ட் செஞ்சு பார்க்கலாமா?

செய்முறை:

முதலில் சேப்பங்கிழங்கை சுத்தம் செய்து குழையாமல் வேக வைக்க வேண்டும்.

சேப்பக்கிழங்கு வெந்த பிறகு அதனை தோல் உரித்து வட்டமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின் கடலை மாவு, அரிசி மாவு ,மிளகாய் தூள் பெருங்காயத்தூள், தயிர், உப்பு ஆகியவற்றை தண்ணீர் தெளித்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் சேப்பக்கிழங்கை கலந்து வைத்த மசாலாவில் பிரட்டி எடுத்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி மசாலாவில் பிரட்டி வைத்துள்ள சேப்பக்கிழங்கை போட்டு மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான மொறுமொறுப்பான சேப்பக்கிழங்கு ரோஸ்ட் ரெடி.மொறு மொறுன்னு சேப்பக்கிழங்கு ரோஸ்ட் செஞ்சு பார்க்கலாமா?

இந்த சேப்பக்கிழங்கு ரோஸ்டை சாம்பார் சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.

MUST READ