Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சுவையான இளநீர் பொங்கல் செய்வது எப்படி?

சுவையான இளநீர் பொங்கல் செய்வது எப்படி?

-

- Advertisement -

இளநீர் பொங்கல் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 2 கப்
இளநீர் – 4 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
வெல்லம் – 2 கப்
முந்திரி – 10
உலர் திராட்சை – 10
தேங்காய் பால் – 1 1/2 கப்
இளநீர் (வழுக்கை தேங்காய்) – 1 கப்
குங்குமப்பூ – 2 சிட்டிகை
ஏலக்காய் தூள் – சிறிதளவு

நெய் – சிறிதளவு

சுவையான இளநீர் பொங்கல் செய்வது எப்படி?

செய்முறை:

இளநீர் பொங்கல் செய்வதற்கு முதலில் வெல்லத்தை பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின் கடாயில் பாசிப்பருப்பை வறுத்து வைத்து கொள்ள வேண்டும்.

பின் வறுத்த பருப்புடன் பச்சரிசியை சேர்த்து கழுவ வேண்டும். பின் அதனை குக்கரில் போட்டு இளநீர் சேர்த்து மூடி நான்கு விசில் வரும் வரை வேக விட வேண்டும்.

அரிசியும் பருப்பும் வெந்து வரும் நேரத்தில் இன்னொரு பாத்திரத்தில் வெல்லத்தை காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அரிசியும் பருப்பும் வெந்து வந்த பிறகு குக்கரை திறந்து வெல்லத்தை சேர்த்து கிளறி விட வேண்டும்.

இப்போது பொங்கல் இளகி வரும் சமயத்தில் தேங்காய் பால் சேர்க்க வேண்டும்.

அதே வேளையில் உலர் திராட்சை மற்றும் முந்திரியை நெய்யில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.சுவையான இளநீர் பொங்கல் செய்வது எப்படி?

இப்போது தயாரான பொங்கலில் வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து, அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.

சுவையான இளநீர் பொங்கல் ரெடி.

MUST READ