Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தக்காளி கிரீம் சூப் செஞ்சு பார்க்கலாம் வாங்க!

தக்காளி கிரீம் சூப் செஞ்சு பார்க்கலாம் வாங்க!

-

தக்காளி கிரீம் சூப் செய்ய தேவையான பொருட்கள்தக்காளி கிரீம் சூப் செஞ்சு பார்க்கலாம் வாங்க!

பழுத்த தக்காளி ( பெரியது) – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 1
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
சோள மாவு – 2 ஸ்பூன்
வெண்ணெய் – 1 ஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள்- 1/2 ஸ்பூன்
பிரியாணி இலை – 1
பால் – 1/4 கப்
சர்க்கரை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

தக்காளி கிரீம் சூப் செய்ய முதலில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை தனித்தனியே நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர்ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து அதில் பிரியாணி இலை, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி, வெங்காயம் நன்கு வதங்கிய பின் ஒன்றரை கப் அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

தக்காளி நன்றாக வெந்து வந்ததும் வடிகட்டியில் அதன் சாறை வடித்து தக்காளி, வெங்காயத்தை மட்டும் நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளி கிரீம் சூப் செஞ்சு பார்க்கலாம் வாங்க!

இப்போது வடிகட்டி வைத்திருக்கும் தண்ணீரில் மசித்த வைத்த விழுது, உப்பு, தக்காளி சாஸ், வெள்ளை மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.

அதே சமயம் சோழ மாவினை பாலில் கரைத்து அந்த கரைசலையும் வெங்காயம், தக்காளி விழுதுடன் சேர்த்து கடந்த மீண்டும் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு பிறகு அடுப்பினை அணைத்துவிட்டு சூப்பை இறக்கி அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கலக்க வேண்டும்.தக்காளி கிரீம் சூப் செஞ்சு பார்க்கலாம் வாங்க!

தேவைப்பட்டால் கொத்தமல்லி தழைகளை தூவிக் கொள்ளலாம். கூடுதல் சுவைக்காக பிரட் துண்டுகளை பொரித்து சேர்த்துக் கொள்ளலாம்.

அருமையான தக்காளி கிரீம் சூப் தயார். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

MUST READ