Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வல்லாரை கீரையில் பாயாசம் செஞ்சுப்பாருங்க!

வல்லாரை கீரையில் பாயாசம் செஞ்சுப்பாருங்க!

-

வல்லாரை கீரை பாயாசம் செய்வது எப்படி?

வல்லாரை கீரை பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:வல்லாரை கீரையில் பாயாசம் செஞ்சுப்பாருங்க!

வல்லாரை கீரை – 100 கிராம்
தேங்காய் (துருவியது)- அரை கப்
பாதாம் – 10
முந்திரி – 10
பச்சரிசி – 1/4 கப்
நெய் – தேவையான அளவு
பால் – அரை கப்
ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
வெல்லம் – 100 கிராம்

வல்லாரை கீரை பாயாசம் செய்யும் முறை:

முதலில் வல்லாரை கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்தது தேங்காய் துருவலையும் வல்லாரைக் கீரையையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பால் மற்றும் நெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து காய்ச்ச வேண்டும். பச்சரிசியை 2 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.

அதைத்தொடர்ந்து பச்சரிசி, பாதாம், முந்திரி ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.வல்லாரை கீரையில் பாயாசம் செஞ்சுப்பாருங்க!

அடுத்தது வெல்லத்தை உருக்கி பாகு தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் காய்ச்சி வைத்துள்ள நெய் கலந்த பாலை ஊற்றி அதில் ஏலக்காய் தூள் போட்டு கொதிக்க விடவும். மேலும் வடிகட்டி வைத்திருக்கும் வல்லாரை பால், வெல்லப்பாகினை பாலுடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அத்துடன் பச்சரிசி, பாதாம், முந்திரி கலவையை கொட்டி வேக வைக்க வேண்டும். ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் கழித்து பால் ஓரளவிற்கு கெட்டியான பதத்திற்கு வந்ததும் மீண்டும் நெய் சேர்த்து கலந்து அடுப்பினை அணைத்து விட வேண்டும்.

இப்போது அருமையான வல்லாரை கீரை பாயாசம் தயார். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.வல்லாரை கீரையில் பாயாசம் செஞ்சுப்பாருங்க!

குறிப்பு:

கூடுதல் சுவைக்காக முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து பாயாசத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் ஜவ்வரிசியை தனியாக வேக வைத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.

 

MUST READ