Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வெயிலுக்கு இதமான வெள்ளைப் பூசணி ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி?

வெயிலுக்கு இதமான வெள்ளைப் பூசணி ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி?

-

முன்னுள்ள காலத்தில் வெயிலின் தாக்கம் ஏப்ரல் மே மாதங்களில் மட்டும்தான் இருக்கும். ஆனால் இப்போது மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் வாட்டி எடுக்கிறது.

வெயிலுக்கு இதமான வெள்ளைப் பூசணி ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி?

இதனால் சரும நோய்கள், வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சினைகள் உண்டாகிறது. இதற்கு நம் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இல்லாததுதான் காரணம். எவ்வளவுதான் வெயில் காலத்தில் தண்ணீர் குடித்தாலும் அது வேர்வையாக வெளியேறி விடுகிறது. இருப்பினும் நாள் ஒன்றுக்கு மூன்றில் இருந்து 4 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீரை இளநீராகவோ, ஜூஸாகவோ அல்லது சர்பத்தாகவோ எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில் இப்போது வெயிலுக்கு இதமான வெள்ளைப் பூசணி ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.வெயிலுக்கு இதமான வெள்ளைப் பூசணி ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி?

வெள்ளை பூசணி ஸ்பெஷல் சர்பத் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் சப்ஜா விதைகளை சிறிதளவு தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சிறிய துண்டு இஞ்சியை தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் மூன்றிலிருந்து நான்கு புதினா இலைகளை நசுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெள்ளை பூசணியை விதை இல்லாமல் அரைத்து அதனை வடிகட்டி ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது இந்த இஞ்சி, புதினா கலவையில் சிறிதளவு இளநீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இத்துடன் வெள்ளை பூசணி ஜூஸ் சேர்த்து இரண்டு ஸ்பூன் அளவு நன்னாரி அல்லது தேன் கலந்து ஊற வைத்த சப்ஜா விதைகளை சேர்க்க வெள்ளைப் பூசணி ஸ்பெஷல் சர்பத் ரெடி.வெயிலுக்கு இதமான வெள்ளைப் பூசணி ஸ்பெஷல் சர்பத் செய்வது எப்படி?

இந்த ஸ்பெஷல் சர்பத் உடல் உஷ்ணத்தை குறைப்பது மட்டுமல்லாமல் வெயிலினால் ஏற்படும் திடீர் மாரடைப்பை தடுக்கவும் உதவுகிறது.

MUST READ