Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெண்டைக்காய் சூப் குடிங்க!

இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெண்டைக்காய் சூப் குடிங்க!

-

வெண்டைக்காய் சூப் செய்வது எப்படி?

வெண்டைக்காய் சூப் செய்ய தேவையான பொருட்கள்:இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெண்டைக்காய் சூப் குடிங்க!

வெண்டைக்காய் – 4 ( பெரியது)
வடித்த சாதம் – ஒரு கப்
வெள்ளை மிளகுத்தூள் – சிறிதளவு
சோயா சாஸ் – ஒரு ஸ்பூன்
பூண்டு – 3 பல்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

வெண்டைக்காய் சூப் செய்ய முதலில் வெண்டைக்காயை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெண்டைக்காய்களை போட்டு பச்சை வாசனை போகும்வரை வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக பூண்டு பல்லை பொடிப்பொடியாக நறுக்கி அதனையும் நன்கு வதக்கி தண்ணீர் ஊற்றி கலக்கி விட வேண்டும். தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் அதில் எடுத்து வைத்திருக்கும் சாதம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

இப்போது சூப் நன்றாக கொதித்து வந்தவுடன் அதில் சோயா சாஸ், வெள்ளை மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து இன்னும் சில நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

தோராயமாக ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பினை அனைத்து பாத்திரத்தை இறக்கி விட வேண்டும். இப்போது வெண்டைக்காய் சூப் தயார்.இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வெண்டைக்காய் சூப் குடிங்க!

வெண்டைக்காயில் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. மேலும் இது இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் சர்க்கரை நோயாளிகள் வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

MUST READ