Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மகிழம்பூ முறுக்கு செய்வது எப்படி?

மகிழம்பூ முறுக்கு செய்வது எப்படி?

-

மகிழம்பூ முறுக்கு செய்வது எப்படி?

மகிழம்பூ முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 4 கப்
பாசிப்பருப்பு – 1 கப்
தேங்காய் துருவல் – 2 கப்
கற்கண்டு – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவுமகிழம்பூ முறுக்கு செய்வது எப்படி?

செய்முறை

மகிழம்பூ முறுக்கு செய்ய முதலில் பாசிப்பருப்பை ஒரு கடாயில் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வறுத்த பாசிப்பருப்பை மிக்ஸியில் சேர்த்து அரைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.

இப்போது புழுங்கல் அரிசியை நன்கு கழுவி ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின் ஊறிய அரிசியுடன் துருவிய தேங்காய் கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அரைத்து வைத்துள்ள மாவில் பொடியாக்கி வைத்துள்ள பாசிப்பருப்பு மாவு சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். மேலும் இந்த மாவை முள் முறுக்கு அச்சில் சேர்த்து விட வேண்டும்.

அதே சமயம் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மாவை பிழிந்து முறுக்கு பொன்னிறமாக வரும் வரை சுட்டு எடுக்க வேண்டும்.மகிழம்பூ முறுக்கு செய்வது எப்படி?

இப்போது மகிழம்பூ முறுக்கு தயார்.

குறிப்பு:

தேங்காயை அப்படியே சேர்க்காமல் தேங்காய் பால் சேர்த்தும் மாவை அரைத்துக் கொள்ளலாம்.

MUST READ