வெங்காயத்தாள் முட்டை பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
வெங்காயத்தாள் – ஒரு கட்டு
சின்ன வெங்காயம் – 10 முதல் 12
காய்ந்த மிளகாய் – 5
கடுகு – சிறிதளவு
கடலைப்பருப்பு – சிறிதளவு
உளுத்தம் பருப்பு – சிறிதளவு
முட்டை – 2
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தாள் முட்டை பொரியல் செய்வதற்கு முதலில் சின்ன வெங்காயங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதுபோல வெங்காயத்தாள்களையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.
அதன் பின் நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் வெங்காயத்தாளை சேர்த்து கிளற வேண்டும்.
வெங்காயத்தாள் சில நிமிடங்களிலேயே வதங்கிவிடும். ஆகவே அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து எடுத்து வைத்துள்ள முட்டையை உடைத்து ஊற்றி கிளறி விட வேண்டும். முட்டை வெந்து வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
இப்போது வெங்காயத்தாள் முட்டை பொரியல் ரெடி. இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவுக்கு சைடிஷாக வைத்துக் கொடுக்கலாம். அதேசமயம் சப்பாத்திக்கு சைடிஷாகவும் சாப்பிடலாம்.