வெஜிடபிள் வெள்ளை குருமா செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்:
கேரட் – கால் கப்
பீன்ஸ் – கால் கப்
காலிஃப்ளவர் – கால் கப்
பட்டாணி – கால் கப்
உருளைக்கிழங்கு – கால் கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பட்டை – கால் ஸ்பூன்
லவங்கம் – கால் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிய அளவு
கொத்தமல்லி – சிறிய அளவு
தேங்காய் – அரை மூடி
பொட்டுக்கடலை – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் – 5
சோம்பு – கால் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 5
பூண்டு – 8 பல்
கசகசா – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
இப்போது வெள்ளை குருமா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க.
செய்முறை:
முதலில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், சோம்பு, முந்திரி பருப்பு, பூண்டு, கசகசா ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி அதனை கடாயில் சேர்க்கவும்.
உப்பு சேர்த்து வெங்காயம், தக்காளி வெந்து வரும் நிலையில் இஞ்சி பூண்டு விழுதுகளை சேர்க்கவும்.
அதன் பின் பச்சை வாசனை போன பிறகு எடுத்து வைத்துள்ள காய்கறிகளை உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
காய்கறிகள் வெந்து வரும் சமயத்தில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பத்து நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
சுவையான வெஜிடபிள் வெள்ளை குருமா ரெடி. இதனை சப்பாத்தி, இடியாப்பம் போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.