Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆரோக்கியமான வாழைத்தண்டு கூட்டு செய்து பார்க்கலாம் வாங்க!

ஆரோக்கியமான வாழைத்தண்டு கூட்டு செய்து பார்க்கலாம் வாங்க!

-

ஆரோக்கியமான வாழைத்தண்டு கூட்டு செய்து பார்க்கலாம் வாங்க!ஆரோக்கியமான வாழைத்தண்டு கூட்டு செய்து பார்க்கலாம் வாங்க!

தேவையான பொருள்கள்:

வாழைத்தண்டு – ஒரு கப்
பாசிப்பருப்பு – அரை கப்
பச்சை வேர்க்கடலை – கால் கப்
சின்ன வெங்காயம்- 7
பச்சை மிளகாய் – 2
சீரகம் – அரை ஸ்பூன்
நெய் – சிறிதளவு
பால் – சிறிதளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வாழைத்தண்டு கூட்டு செய்வதற்கு முதலில் வாழைத்தண்டினை நார் எடுத்து மிகவும் மெல்லியதாக நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் பாசிப்பருப்பு, பச்சை வேர்கடலை ஆகியவற்றை தனித்தனியே குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் நான்கு வெங்காயத்தை பச்சை மிளகாய் மற்றும் சீரகத்துடன் சேர்த்து , தண்ணீர் தெளிக்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் வெங்காயத்தை பச்சை மிளகாய் மற்றும் சீரகத்துடன் சேர்த்து , தண்ணீர் தெளிக்காமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு கடாயில் வேகவைத்த பாசிப்பருப்பு மற்றும் பச்சை வேர்க்கடலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். அதன் பின் நறுக்கிய வாழைத்தண்டையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.ஆரோக்கியமான வாழைத்தண்டு கூட்டு செய்து பார்க்கலாம் வாங்க!

பின் அரைத்து வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை நெய்யில் வறுத்து, வாழைத்தண்டுடன் சேர்த்து கலக்க வேண்டும்.

பின் சிறிதளவு பால் சேர்த்து பரிமாற வேண்டும்.

இப்போது சுவையான, ஆரோக்கியமான வாழைத்தண்டு கூட்டு ரெடி..

MUST READ