இயற்கையான முறையில் உடல் உஷ்ணத்தை குறைக்கும் மருத்துவம்
உடல் உஷ்ணத்தால் பலருக்கும் பல சரும பிரச்சனைகள் உண்டாகிறது. அது மட்டும் இல்லாமல் உடல் உஷ்ணத்தால் பெண்களுக்கு கருப்பை பிரச்சனைகள் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் குழந்தையின்மை பிரச்சனையும் உண்டாகிறது. எனவே உடல் உஷ்ணத்தை தணிக்க இயற்கையான முறைகளை பின்பற்றுவோம்.
இரவு தூங்குவதற்கு முன் உள்ளங்காலில் நல்லெண்ணெய் தேய்த்து விட்டு தூங்குவதனால் உடல் வெப்பம் தணியும்.
நெல்லிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. எனவே நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிடுவதனால் உடல் சூடு குறையும். நெல்லிக்காய்களை ஜூஸ் செய்தும் சாப்பிடலாம்.
வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் உடல் உஷ்ணம் குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும். அந்த வகையில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.
தயிரை விட மோர் உடல் சூட்டை தணிக்க கூடியது. எனவே வெயில் காலத்தில் தினமும் மோர் குடிப்பது சிறந்தது.
தினமும் இளநீர் எடுத்துக் கொள்வதாலும் உடல் சூடு தணியும்.
இரண்டு ஸ்பூன் அளவு வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்து காலை வேலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.
இம்முறைகளை எல்லாம் ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.