Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கணவன் மனைவி உறவை பலப்படுத்துவது அல்லது உயிரோட்டத்துடன் வைத்திருப்பது எப்படி – சுதாமூர்த்தி விளக்கம்

கணவன் மனைவி உறவை பலப்படுத்துவது அல்லது உயிரோட்டத்துடன் வைத்திருப்பது எப்படி – சுதாமூர்த்தி விளக்கம்

-

 

 

கணவன் மனைவி உறவை பலப்படுத்துவது அல்லது உயிரோட்டத்துடன் வைத்திருப்பது எப்படி – சுதாமூர்த்தி விளக்கம்

கணவன் மனைவி உறவை பலப்படுத்துவது அல்லது உயிரோட்டத்துடன் வைத்திருப்பது எப்படி – சுதாமூர்த்தி விளக்கம்

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி-யின் மனைவி சுதாமூர்த்தி ஆங்கில சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் தமிழாக்கம்.

உங்கள் கணவர் வாழ்கையில் என்னவா ஆக வேண்டும் என்று நினைக்கிறாறோ அவரை அதன்படி ஆகுவதற்கு அனுமதிக்க வேண்டும். அவருடைய தனிமை, சிந்திக்கும் நேரம் அகியவற்றில் தலையிட வேண்டாம். அவர் உங்களுக்கு ஏதுவாக இப்படி தான் சிந்திக்க , செயல்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்தாதீர்கள்.

உங்கள் இருவருக்கும் இடையில் ஈகோ வர அனுமதிக்காதீர்கள். உங்கள் இருவருக்கும் இடையில் நடை பெறும் விவாதத்தில் நான் தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்காதீர்கள். அதுதான் ஈகோ உருவாகுவதற்கான காரணம்.

உங்கள் கணவர் உங்களைப் போலவே சிந்திக்க வேண்டும் என்று வலியுறுத்தாதீர்கள்.

வெவ்வேறு குடும்பம், வெவ்வேறு கலாச்சாரம் வேறு பின்னணியில் உள்ள ஒருவரை நீங்கள் திருமணம் செய்யும்போது, அவர் உங்களைப் போலவே சிந்திக்க வேண்டும் என்று நீங்கள் ஏன் வலியுறுத்த வேண்டும்.

எனது கணவர் நாராயண மூர்த்திக்கு இன்ஃபோசிஸில் பணிபுரிவது மகிழ்ச்சி.

ஒரு கோட்டை கட்ட வேண்டும் என்றால் அதற்கு உங்களுக்கு பணம் ,இடம், நேரம் மற்றும் தேவையான பொருட்கள்  அவசியப்படுகிறது . நான் எங்களது குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்தேன் என்றால் மாயாஜால அற்புதங்களை திரைப்படங்களில் மட்டுமே பார்க்க முடியும். அதாவது சிண்ட்ரெல்லா போன்ற மேஜிக் ஒன்றில் தான் நீங்கள் தொட்டால் கோட்டை ஆகிவிடும். உங்கள் வாழ்க்கையில் அது நடக்காது.  அப்பாவுக்கு உதவும் அளவிற்கு எந்த ஒரு பணக்காரர்களுடன் தொடர்பும் இல்லை, பணமும் இல்லை. அவருடைய தன்னம்பிக்கை, திறமை மற்றும் உழைப்பைத் தவிர அவரிடம் வேறு எதுவும் இல்லை.

கணவன் மனைவி உறவை பலப்படுத்துவது அல்லது உயிரோட்டத்துடன் வைத்திருப்பது எப்படி – சுதாமூர்த்தி விளக்கம்

நாராயண மூர்த்திக்கு INFOSYS என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவருடைய லட்சியம். இன்ஃபோசிஸை உருவாக்க வியர்வை, இரத்தம் மற்றும் கடின உழைப்பை செலுத்த வேண்டியிருந்தது,  எந்த மந்திரமும் இதை செயல்படுத்தவில்லை.

அதற்கு அவர் தனித்து இருக்க வேண்டும். நீங்கள் அவரை மகிழ்ச்சியுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் . அதைவிட்டு நீங்கள் வரவில்லை … நீங்கள் செய்யவில்லை , நீங்கள் பள்ளி PTA கூட்டத்திற்கு வரவில்லை,விடுமுறைக்கு வாருங்கள் என்றேல்லாம் அவரிடம் சொல்லக்கூடாது.

அப்படி பார்த்தால் பல வருடங்களாக நாங்கள் விடுமுறை எடுக்கவில்லை. எங்கள் சொந்த வீட்டில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம், அதையே நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். அப்பாவின் வேலைகள் குடும்பத்திற்கு நல்லது என்று குழந்தைகளுக்கு எப்போதும் சொல்வேன்.

கணவன் மனைவி உறவை பலப்படுத்துவது அல்லது உயிரோட்டத்துடன் வைத்திருப்பது எப்படி – சுதாமூர்த்தி விளக்கம்

அப்பா செய்யும் இந்த வேலைகள் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கு நல்லது. அப்பாவுக்கு பெரும் திருப்தியை தருகிறது.

அப்பா INFOSYS ஐ உருவாக்க விரும்புகிறார் என்றால் நாம் அனைவரும் முதலில் அவர் சிறந்த வேலையைச் செய்கிறார் என்பதை நன்றாக உணர வேண்டும். அதை நாம் ஊக்குவிக்க வேண்டும். அதை நானும் செய்தேன், எங்களது குழந்தைகளும் செய்தார்கள்.

நாராயண மூர்த்தி எங்காவது பயணம் செய்ய திட்டமிட்டால் நீங்கள் ஏன் 30 நாட்கள் … 40 நாட்கள் செல்கிறீர்கள் என்று நான் சொல்லவே மாட்டேன். 15 …20 என எத்தனை சட்டைகள் போட வேண்டும் என்று மட்டும் கேட்பேன்.  நான் மட்டுமே அவறுடைய பையை பேக் செய்வேன்.

எனவே, திருமண பந்தத்தில் இந்த மாதிரியான சுதந்திரத்தை துணைக்குக் கொடுக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன்.

எனது கணவர் நாராயண மூர்த்தியும் அதே சுதந்திரத்தை எனக்கும் அளித்தார். என் கணவருக்கு எனது கடவுச்சொற்கள் (PASSWORDS) தெரியாது.

என் கடிதங்களை அவர் படிப்பதில்லை. ஏனென்றால் தனிநபர்கள் மதிக்கப்பட வேண்டும். எல்லா விஷயத்தையும் எல்லோரிடமும் சொல்ல முடியாது. எனக்கு சில விஷயங்கள் எனக்கு மட்டும் என இருக்கும். அதே போன்று அவருக்கும் இருக்கும்.

கணவன் மனைவி உறவை பலப்படுத்துவது அல்லது உயிரோட்டத்துடன் வைத்திருப்பது எப்படி – சுதாமூர்த்தி விளக்கம்

நீங்கள் திருமணம் செய்து கொண்டதால் A முதல் Z வரை உங்கள் வாழ்கை துனையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பது கிடையாது.

அதற்கு நராயண மூர்த்தி கூறுகிறார் ”திருமணத்திற்கு முன்பு நாங்கள் இருவரும் எடுத்த முடிவு என்வென்றால், அவளுக்கு  கடிதம் வந்தால் நான் அதைப் பார்க்க மாட்டேன். அதே போன்று எங்கு சென்றாய்? எப்படி நேரத்தை செலவழித்தாய்? என்று அவளிடம் நான் கேட்க மாட்டேன். மிக முக்கியமாக நான் அவளுடைய மின்னஞ்சல்களைப் பார்த்ததில்லை அல்லது அவளுடைய எந்த கடவுச்சொற்களையும் பார்த்ததில்லை என்றார்.

நான் அடித்தளத்தில் இருக்கும் மக்களுக்கு வேலை செய்வது, ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்துவந்தேன். ஆனால் எனது கணவர் நராயண மூர்த்திக்கு ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது.

எனக்கு ஒரு நிறுவனத்தை உருவாக்குவது முக்கியமில்லாமல் இருக்கலாம். அவரைப் பொறுத்தவரை, குடும்பத்தை விட்டு வெளியேறி வேரு நபர்களுக்கு உதவுவது முக்கியமில்லாமல் கூட இருக்கலாம், ஆனால் அது என் விருப்பம் மற்றும் அதே போல் இன்ஃபோசிஸ் அவரது விருப்பம். ஒருவருக்கொருவர் உள்ள பரஸ்பர ஆர்வத்தை மதிக்க வேண்டும். ‘உங்கள் ஆசைகள் வித்தியாசமாக இருக்கலாம், ஆனால் உங்கள் மதிப்புகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்’ என்றார் சுதா மூர்த்தி.

நீங்கள் திருமணமானவர் என்பதால் உங்களுக்கு ஒரு ஆசை இருக்க வேண்டிய தில்லை என்பது கிடையாது. உங்கள் உணர்வுகள் தனித்தனியாக இருக்கலாம். ஆனால் உங்கள் மதிப்புகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என மிகவும் அழகாக விளக்கினார்.

மேலும் உங்கள் செயல்கள் மூலம் ஒருவரை ஒருவர் சமமாக மதிக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கிறீர்கள். இருவரும் ஒன்றாக நேரத்தை செலவு செய்வது என்பது மிகவும் முக்கியமான விஷயம். ஒருவருக்கொருவர் உற்சாகமாக இருங்கள். அந்த உறவின் நடுப்பகுதி குழந்தைகள். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே 15 -ல் இருந்து -18 வருடங்களுக்கு பொதுவானது குழந்தைகள் மட்டுமே என நராயண மூர்த்தி & சுதா மூர்த்தி உறவுகளின் மேன்மையை குறித்து பேசினார்கள்.

MUST READ