சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் நம் ஆரோக்கியத்திற்கு நல்லதா என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் அல்லது ரீஃபைண்ட் ஆயில் என்று அழைக்கப்படும் எண்ணெய் வகைகளில் ட்ரான்ஸ் ஃபேட்டி அளவு அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. டிரான்ஸ் ஃபேட்டி என்றால் அதிகமான கொழுப்புகளாகும்.
டிரான்ஸ் ஃபேட்டி எப்படி உருவாகிறது என்றால் எண்ணெயானது சுத்திகரிப்பு செய்யப்படும் போது 400 டிகிரிக்கு மேல் சூடாக்கப்படுகிறது. மேலும் இது ரசாயன கரைப்பானை பயன்படுத்தி வடித்த பின்னர் இதன் உண்மையான நிறம் சுவை ஆகியவை இழக்கப்பட்டு ட்ரான்ஸ் ஃபேட்டி ஆசிடாக மாறுகிறது. இந்த கொழுப்புகள் இதய நோய், புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை ஊக்குவிக்கின்றன. இது செரிமான பிரச்சனைகளுக்கும் வழிவகை செய்கிறது.எனவே சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், நம் ஆரோக்கியத்திற்கு பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை நாம் உண்ணும் உணவுகளில் சேர்ப்பதனால் நீரிழிவு நோய், பெருந்தமணி தடிப்பு, உடல் பருமன், இனப்பெருக்க பிரச்சனைகள், இரைப்பைக் குடல் சம்பந்தமான நோய்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு கொஞ்சம் பலவகையான நோய்கள் உண்டாகும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயானது அலர்ஜி பிரச்சனைகளை அதிகமாக்குகிறது. ஆகவே சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லும் ஒரு ஸ்லோ பாய்சன் என்பதை புரிந்து கொண்டு இதனை சமையலுக்கு பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். அதே சமயம் இதனால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது.