Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.. கம்பு உப்புமா செய்வது எப்படி?

சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.. கம்பு உப்புமா செய்வது எப்படி?

-

தேவையான பொருட்கள்;

கம்பு                    -1கப்

வெங்காயம்          -3

பச்சைமிளகாய்     -5

கடுகு                     -1/4 ஸ்பூன்

உளுத்தம்பருப்பு     -1/2 ஸ்பூன்

கடலைபருப்பு        -1/2ஸ்பூன்

கொத்தமல்லி        -சிறிது

கறிவேப்பிலை     -சிறிது

உப்பு                     – தேவையான அளவு

எண்ணெய்            -தேவையான அளவு

செய்முறை;

  • கம்பை மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்து சலித்துக்கொள்ளவும்.
  • கடாயில் கம்பு ரவையை மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  • கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலைபருப்பு,நறுக்கிய வெங்காயம் ,பச்சை மிளகாய்  சேர்த்து பொன் நிறமாக வதக்கவும் .
  • ஒரு கப் ரவைக்கு 2  ¼ கப் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • பிறகு கம்பு ரவையை  கொட்டி கைவிடாமல் கிளறிவிடவும்.மிதமான தீயில் வேகவிடவும்.பிறகுகொத்தமல்லி சேர்த்து இறக்கிவிடவும்.இப்போது சூடான கம்பு உப்புமா ரெடி.
  • சர்க்கரை உள்ளவர்கள் வாரத்தில் 2 முறை இந்த உப்புமாவைச் சாப்பிடுவது மிகவும் நல்லது.

கம்பின் பயன்கள்;

  • கம்பு இரும்புச்சத்து நிறைந்தது.
  • சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
  • கொழுப்பை குறைக்கிறது.
  • தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.

MUST READ