Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இதய நோய் தொடர்பான காரணிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

இதய நோய் தொடர்பான காரணிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

-

இன்று அவசர காலகட்டத்தில் நாம் ஓடிக் கொண்டிருப்பதால் பலருக்கும் அவரவரை கவனித்துக் கொள்வதற்கே நேரம் என்பது கிடையாது. சொல்லப்போனால் பிரஷாக சமைத்து சாப்பிட கூட நேரமில்லாமல் பிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை மீண்டும் சூடு படுத்தி பயன்படுத்தி வருகிறார்கள்.இதய நோய் தொடர்பான காரணிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! இதுபோன்ற சூழல் தொடர்ந்து ஏற்படுவதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதில் நீரழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பலவற்றை சொல்லலாம். அதேபோல் உடல் உழைப்பு இல்லாமல் இருந்தாலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். அதில் முக்கியமானது இதய நோய். ஏனென்றால் நம் இதயம் ஆரோக்கியமாக இருந்தால் தான் நாமும் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம். எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு முதலில் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதய நோய் தொடர்பான காரணிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!அடுத்தது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும். மது அருந்துதல் புகைப்படக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும். எண்ணெய் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது. உளவியல் அழுத்தத்தை குறைக்க வேண்டும்.

இதய நோய் தொடர்புடைய முக்கிய காரணிகள்:

உடல் பருமன், புகைப்பிடித்தல், ரத்த அழுத்தம், மன அழுத்தம், நீரழிவு, உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை, இதய நோய் கொண்ட குடும்ப பின்னணி ஆகியவை இதய நோய் தொடர்புடைய ஆபத்தான காரணிகள் ஆகும். இதய நோய் தொடர்பான காரணிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!எனவே நாம் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் மேற்கண்ட பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது. மேற்கண்ட பிரச்சினைகள் இல்லாமல் இருந்தால்தான் இதய நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.

இது தொடர்பாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ