Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ABC ஜூஸின் நன்மைகளை தெரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு இதையும் கொடுங்க!

ABC ஜூஸின் நன்மைகளை தெரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு இதையும் கொடுங்க!

-

ABC ஜூஸ் என்பது ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய மூன்றும் கலந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ABC ஜூஸ் என்பதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருகலாம்.ABC ஜூஸின் நன்மைகளை தெரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு இதையும் கொடுங்க! இந்த ஜூஸில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது. அதாவது இந்த ஜூஸ் நமது உடலில் இயற்கை நச்சு நீக்கியாக செயல்பட்டு கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும் இது மலச்சிக்கலை தடுத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ கண் பார்வைக்கு நல்லது. அடுத்ததாக ABC ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. எனவே ABC ஜூஸை நீங்களும் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதேசமயம் நம் குழந்தைகளுக்கு பாலில் சில கெமிக்கல் கலந்த ஹெல்த் ட்ரிங்க்ஸ் கொடுத்து வருகிறோம். இது நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக அதில் பூச்சி மருந்து கலக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ABC ஜூஸின் நன்மைகளை தெரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு இதையும் கொடுங்க!எனவே ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய மூன்றையும் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அல்வா பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். அதன் பின்னர் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகிய மூன்றையும் வறுத்து அரைத்து ABC கலவையில் கொட்டி நன்கு கிளற வேண்டும். அத்துடன் நாட்டு சர்க்கரையும் சேர்த்து கிளற வேண்டும். தண்ணீர் நன்கு வற்றி வந்த பின் அதை அப்படியே அடுப்பில் இருந்து இறக்கி கைவிடாமல் கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை கைவிடாமல் கிளற வேண்டும். ABC ஜூஸின் நன்மைகளை தெரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு இதையும் கொடுங்க!அப்படி கிளறினால் ABC கலவை உதிரி உதிரியாக வரும். கெட்டி இல்லாமல் உதிரியாக வந்ததை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பாட்டிலில் அடைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஆரோக்கியமான ABC ஹெல்த் ட்ரிங்க் தயார். இதனை தினமும் பாலில் கலந்து குடித்து வர உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

MUST READ