Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் இந்த புதினாவை மென்று சாப்பிடுங்க!

பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் இந்த புதினாவை மென்று சாப்பிடுங்க!

-

புதினாவின் மருத்துவ பயன்கள்:பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் இந்த புதினாவை மென்று சாப்பிடுங்க!

புதினா என்பது எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு மருத்துவ மூலிகை. புதினாவை நாம் சட்னி முதல் பிரியாணி வரை பயன்படுத்துகிறோம். இதில் அதிகமான ஆக்சிஜனேற்றம் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. அதன்படி இது ஒவ்வாமைக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. மேலும் இது செரிமான கோளாறுகளை சரி செய்யவும் உதவுகிறது.பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் இந்த புதினாவை மென்று சாப்பிடுங்க!

அடுத்ததாக பாலூட்டும் தாய்மார்களின் முலைக்காம்பு விரிசலை சரி செய்ய இந்த புதினா பயன்படுகிறது. தாய்ப்பாலுடன் வரும் வலியையும் இது கட்டுப்படுத்துகிறது. எனவே இரண்டு மூன்று இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிட்டாலே பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

தலைவலியிலிருந்து விடுபட புதினா இலைகளை தேநீரில் போட்டு சாப்பிட்டால் தலைவலி குணமாகும். (இல்லையென்றால் புதினா இலைகளை காய வைத்து பொடி செய்து அதையும் தேயிலையுடன் கலந்து தேநீர் தயார் செய்து பருகலாம்)
மேலும் இது வாய் துர்நாற்றம், குடல் எரிச்சல் போன்றவைகளுக்கு தீர்வளிக்கிறது.பாலூட்டும் தாய்மார்கள் கட்டாயம் இந்த புதினாவை மென்று சாப்பிடுங்க!

புதினாவில் உள்ள மென்தோஸ் எனும் பொருள் மூக்கடைப்பு பிரச்சனையை சரி செய்யவும் இருமலில் இருந்து விடுபடவும் உதவுகிறது.

இவ்வாறு பல நன்மைகளை தரும் புதினாவில் நீர்ச்சத்து, புரதம் கொழுப்பு, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து , வைட்டமின் ஏ போன்ற பல சத்துக்கள் அடங்கியிருக்கும் நிலையில் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இருப்பினும் புதினாவால் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ