சர்க்கரை நோய் என்பது இன்றுள்ள காலகட்டத்தில் கர்ப்பிணிகள் உட்பட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது. அதனால் பலரும் விரும்பியதை சாப்பிட முடியாமலும், எதை சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும் என்று நினைத்தும் மிகுந்த மன வேதனைக்கு ஆளாகிறார்கள்.
நம் முன்னோர்கள் பாகற்காய் ஜூஸ், கறிவேப்பிலை உள்ளிட்ட பல நாட்டு வைத்தியங்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதாக கூறியிருக்கிறார்கள். அதில் நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் முக்கியமான காய்கறிகளில் ஒன்றான வெண்டைக்காயும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
ஏற்கனவே வெண்டைக்காய் என்பது பல நோய்களுக்கு தீர்வாக விளங்குகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதன்படி வெண்டைக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம் உள்ளிட்ட வைட்டமின்களும் மினரல்களும் இருப்பதனால் மலச்சிக்கல் முதல் மலட்டுத்தன்மை வரை பல நோய்களை குணப்படுத்த வெண்டைக்காய் உதவுகிறது.
தற்போது சர்க்கரை நோய்க்கு தீர்வாக வெண்டைக்காய் சாறு பயன்படுகிறது.
செய்முறை:
2 வெண்டைக்காயை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். தொடர்ந்து செய்து வந்தால் சர்க்கரை நோயினால் ஏற்படும் விளைவுகளை தடுக்கலாம் என்று நம் முன்னோர்களும் மருத்துவர்களும் கூறி இருக்கிறார்கள்.
இதை பயன்படுத்திய பிறகு ஒவ்வாமை பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை எனில் இந்த வெண்டைக்காய் சாற்றை தினமும் பருகலாம்.