ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும் வழி.
இன்றுள்ள காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கங்களின் மாறுபாட்டால் பெண் பிள்ளைகளுக்கு ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் மாதவிடாய் கோளாறு மட்டுமல்லாமல் முடி உதிர்தல், உடல் சோர்வு, தூக்கமின்மை, மன அழுத்தம், குழந்தை பெறுவதில் சிரமம் போன்ற ஏகப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது ஹார்மோன் சமநிலையின்மை ஆண், பெண் இருபாலருக்கும் உண்டாகும். ஆனால் பெண்களே இதில் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவேதான் பெண்கள் ஹார்மோன் சமநிலையின்மை என்பதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் அதில் கவனம் செலுத்த வேண்டும். தற்போது ஹார்மோன் சமநிலையின்மையை தடுப்பதற்கான வழியை பார்க்கலாம்.
ஆளி விதை என்பது ஹார்மோன் சமநிலையை பராமரிக்க உதவும். இது அளவில் சிறியதாக இருந்தாலும் இதன் ஆரோக்கிய நன்மைகள் பல. அதன்படி ஆளி விதையில் நார்ச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் போன்றவை காணப்படுகிறது. இது மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தருவதோடு, குடல் நலத்தையும் மேம்படுத்துகிறது. அத்துடன் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும். இது தவிர உடல் எடையை குறைப்பதில் ஆளி விதை முக்கிய பங்கு வகிக்கும். மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரவும், தலைமுடி உதிர்தலை சரி செய்யவும் பயன்படும். இதில் உள்ள கால்சியம் எலும்புகளை பலப்படுத்தும். இதில் இருக்கும் வைட்டமின் இ சருமத்தை பிரகாசமாக்கும்.
இவ்வளவு அற்புத குணங்கள் கொண்ட ஆளி விதைகளை அரைத்து பொடியாக்கி நாள் ஒன்றுக்கு ஒன்று முதல் இரண்டு மேசை கரண்டி அளவு எடுத்து சாம்பார் போன்றவைகளில் கலந்து பயன்படுத்தலாம். தயிர் அல்லது ஜூஸில் கலந்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதால் ஹார்மோன்கள் சமநிலைக்கு வரும். எனவே நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
குறிப்பு: (பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் போன்றவர்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்)