கொண்டைக்கடலை தோசை
தேவையான பொருள்கள்:
கொண்டைக்கடலை – ஒரு கப்
சீரகம் – சிறிதளவு
பூண்டு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 5
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கொண்டைக்கடலை தோசை செய்ய முதலில் கொண்டைக்கடலையை நன்கு கழுவி 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
அதன் பின் ஊற வைத்த கொண்டைக்கடலையை பூண்டு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து கிரைண்டரில் தோசை மாவு பதத்திற்கு வரும் முறை அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இப்போது இந்த மாவினை புளிக்க வைக்க தேவை இருக்காது.
எனவே அடுத்தபடியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு சீரகத்தை சேர்த்து தாளித்து மாவில் சேர்த்து கலக்க வேண்டும்.
(தேவைப்பட்டால் வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்து கலந்து கொள்ளலாம்)
இப்போது தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடான பின் மாவை ஊற்றி தோசையாக வார்த்து எடுக்க வேண்டும். கூடுதல் சுவைக்காக நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது ஆரோக்கியமான கொண்டைக்கடலை தோசை தயார்.
கொண்டைக்கடலையில் கால்சியம் சத்துக்களும் பாஸ்பரஸ் சத்துக்களும் நிறைந்துள்ளன. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த கொண்டைக்கடலை தோசையை சாப்பிடலாம்.