Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மஞ்சள் காமாலைக்கு தீர்வு தரும் அதிமதுரம்!

மஞ்சள் காமாலைக்கு தீர்வு தரும் அதிமதுரம்!

-

இயற்கையான மூலிகை வகைகளில் அதிமதுரமும் ஒன்று. இந்த அதிமதுரம் என்பது சித்த மருத்துவ மருந்துகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.மஞ்சள் காமாலைக்கு தீர்வு தரும் அதிமதுரம்! அதாவது நெஞ்சு சளியை கட்டுப்படுத்த இந்த அதிமதுரம் பயன்படுகிறது. மேலும் தலைவலியை குணப்படுத்தவும் அதிமதுரம் உதவுகிறது. எனவேதான் தேநீர் அருந்தும் போது அந்த தேயிலையில் அதிமதுரம் கலந்து பருகுகிறார்கள். அதேசமயம் அதிமதுரத்தை காய வைத்து பொடி செய்து தினமும் காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும். அதுமட்டுமில்லாமல் மஞ்சள் காமாலை எட்டிக் கூட பார்க்காது என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். அதிமதுரத்தில் இருக்கும் வேர் பகுதிகள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. மேலும் இந்த அதிமதுரமானது செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் பிரச்சனை போன்றவைகளுக்கு தீர்வு அளிக்கும்.

வயிற்று எரிச்சல் இருப்பவர்கள் இந்த அதிமதுரத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். அடுத்ததாக குடல் புண்கள் குணமடைய, இருமல் குணமடைய அதிமதுரம் பயன்படுகிறது.Licorice cures jaundice!

அதிமதுரத்தை அடிக்கடி எடுத்துக் கொள்வதனால் வயிறு சம்பந்தமான எந்த பிரச்சனையும் அண்டாது. செரிமானம் அதிகரித்து உடல் ஆரோக்கியம் மேம்படும். காலை உணவு சாப்பிடாமல் இருப்பவர்களுக்கு அல்சர் புண்கள் ஏற்படக்கூடும். எனவே அந்த அல்சர் புண்களை சரி செய்ய அதிமதுர பொடியை காலை மற்றும் இரவு என இரு வேலைகளில் எடுத்துக் கொள்வதனால் விரைவில் புண்கள் சரியாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த அதிமதுரம் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உடல் வளர்ச்சிக்கு சிறந்ததாகவும் பயன்படுகிறது. இருப்பினும் அதிமதுரம் எடுத்துக் கொள்வதால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ