தினமும் 2 முட்டை சாப்பிடுவதனால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.
முட்டை என்பது முழுமையான சத்துள்ள உணவுப் பொருளாகும். அதன்படி முட்டையில் 13 வகையான வைட்டமின்களும், ஒமேகா 3 மற்றும் தாதுக்களும் அடங்கியுள்ளது. எனவே தினமும் காலையில் இரண்டு முட்டை சாப்பிடுவதனால் பல ஆரோக்கியமான நன்மைகள் கிடைக்கிறது.
1. முட்டையில் அதிக அளவில் புரதம் இருப்பதனால் இது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.
2. இதில் வைட்டமின் பி இருப்பதால் மூளையின் செயல்பாடு மேம்படுகிறது.
3. அடுத்தது முட்டையில் கொழுப்பு இருப்பதனால் இது நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தி அதிக உணவு சாப்பிடுவதை தடுக்க உதவும். அதுமட்டுமில்லாமல் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படுவதையும் தடுக்கும்.
4. முட்டையில் உள்ள கோலின் எனும் ஊட்டச்சத்து நினைவாற்றலுக்கும், நரம்பு மண்டலத்திற்கும் உதவும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் காலையில் முட்டை எடுத்துக் கொள்வது நல்லது.
5. முட்டை என்பது உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.
6.முட்டையில் உள்ள வைட்டமின் டி மற்றும் பயோட்டின் ஆகியவை முடி வளர்ச்சிக்கும், சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் உதவுகிறது.
7. இதில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கண்பார்வையை பாதுகாக்கும்.
8. இருப்பினும் கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு தினமும் இரண்டு முட்டை எடுத்துக் கொள்ளலாம். மேலும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.
குறிப்பு: முட்டையை வேகவைத்து, ஆம்லெட் செய்து சாப்பிடுவது தான் சரியான முறை.