நிலத்தில் வளரும் ஒவ்வொரு மூலிகைகளிலும் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மூலிகையும் ஓராயிரம் நோய்களை தீர்க்கும். தற்போது அதிமதுரத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான சமயங்களில் இது உங்களுக்கு உதவலாம்.
அதிமதுரத்தின் வேர் பகுதியில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன. அதிமதுரம் என்பது சர்வதேச மருத்துவ மூலிகை ஆகும். அனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை மிக எளிய முறையில் நோய்களை நீக்கிவிடும்.
1. அதிமதுரத்தில் உள்ள பசை பொருள் செரிமானத்திற்கு உதவுகிறது.
2. மலச்சிக்கலை சரி செய்ய அதிமதுரம் பயன்படுகிறது.
3. கல்லடைப்பு நீங்கவும், ரத்தப்போக்கை நிறுத்தவும், சிறுநீர்ப்பை புண்களை அகற்றவும் அதிமதுரம் பயன்படுகிறது.
4. அதிமதுரம், மிளகு, கடுக்காய் ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்துக்கொண்டு அதனை வறுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர இருமல் குணமடையும்.
5. பிரசவத்திற்கு முன் ஏற்படும் உதிரப்போக்கை தடுப்பதற்கும் அதிமதுரம் உதவுகிறது.
6. மஞ்சள் காமாலை நீங்க அதிமதுரம் பயன்படுகிறது. அதிமதுரம் மற்றும் சங்கம் வேர்ப்பட்டை ஆகியவற்றை பொடி செய்து எலுமிச்சை பழச்சாற்றுடன் சேர்த்து அரைத்து மாத்திரை அளவில் எடுத்து பசும்பாலில் கலந்து மூன்று தினங்கள் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமடையும்.
7. பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்கள் குணமாகவும் அதிமதுரம் பயன்படுகிறது. மேலும் சுகப்பிரசவத்திற்கும் அதிமதுரம் பயன்படுகிறது.
8. தாய்ப்பால் பெருகுவதிலும் அதிமதுரம் பயன்படுகிறது. ஒரு கிராம் அதிமதுர சூரணத்தை பாலில் கலந்து சிறிதளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்.
9. நெஞ்சு சளி மற்றும் வறட்டு இருமல் ஆகியவற்றை குணப்படுத்தவும் அதிமதுரம் பயன்படுகிறது. அதிமதுரம், திப்பிலி, சித்தரத்தை, வால் மிளகு ஆகிய ஒவ்வொன்றையும் 5 கிராம் அளவு எடுத்து பொடி செய்து 250 மில்லி லிட்டர் கொதிக்கும் நீரில் போட்டு 30 நிமிடங்கள் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை என இருவேளை சாப்பிட்டால் வறட்டு இருமல் சரியாகும்.