Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்எழுத்தாணிப் பூண்டின் மருத்துவ குணங்கள்!

எழுத்தாணிப் பூண்டின் மருத்துவ குணங்கள்!

-

மூலிகை வகைகளில் எழுத்தாணி பூண்டும் ஒன்று. இதற்கு முத்தெருக்கன் செவி என்ற வேறு பெயரும் உண்டு. இந்த எழுத்தாணி பூண்டு செடியின் இலை மற்றும் வேர் ஆகியவை மருத்துவ குணங்கள் நிறைந்தது. மேலும் இது ஒரு குறுஞ்செடி வகையாகும். இவை எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.

எழுத்தாணிப் பூண்டின் மருத்துவ குணங்கள்!இப்போது எழுத்தாணிப் பூண்டின் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.

எழுத்தாணிப் பூண்டு மலமிளக்கியாக செயல்படுகிறது. அந்த வகையில் இந்த எழுத்தாணி பூண்டின் இலைகளை 5 முதல் 10 கிராம அளவில் எடுத்து அதனை அரைத்து சாப்பிட்டு வர மலம் தாராளமாக வெளியேறும். இதனை காலை மாலை என இரு வேளைகள் சாப்பிட்டு வர சீதபேதி குணமடையும்.

இந்த எழுத்தாணி பூண்டு செடியின் இலைகளை பறித்து அதன் சாறு எடுத்து, சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து மதமாக காய்ச்சி உடம்பில் தடவி வர சொறி, சிரங்கு போன்ற பிரச்சனைகள் சரியாகும்.எழுத்தாணிப் பூண்டின் மருத்துவ குணங்கள்!

எழுத்தாணி பூண்டு செடியின் வேரை ஐந்து கிராம் அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த வேரை பால் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி காலை மாலை என இரு வேளைகளில் சாப்பிட்டு வர மார்பகம் வளர்ச்சி அடையும். மேலும் கரப்பான், பருவு, பிளவை ஆகியவை தீரும்.

இருப்பினும் இம்முறைகளை எல்லாம் ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

MUST READ