Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சிவப்பு கொய்யாவின் சிறப்பு பலன்கள்!

சிவப்பு கொய்யாவின் சிறப்பு பலன்கள்!

-

மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்று சிவப்பு கொய்யா. உலக அளவில் மிகவும் பயனுள்ள பலமாக அறியப்படுகிறது இந்த சிவப்பு கொய்யா பழம்.சிவப்பு கொய்யாவின் சிறப்பு பலன்கள்! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் குளிர்ச்சியை தரக்கூடியதும் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மேலும் பல வழிகளில் நன்மையை பயக்குகிறது இந்த சிவப்பு கொய்யாப்பழம்.

பளபளப்பான சருமத்தை பெறவும், அழகை மெருகேற்றும் ஆற்றல் வாய்ந்தது.

உடல் எடையை குறைக்க விரும்புவோர் டயட் பட்டியலில் சிவப்பு கொய்யாப்பழத்தை தவறாமல் சேர்த்துக் கொள்ளலாம்.

வைட்டமின் சி உட்பட பல சத்துக்கள் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்தவும் செய்கிறது இக்கொய்யாப்பழம்.சிவப்பு கொய்யாவின் சிறப்பு பலன்கள்!

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி,ரத்த அழுத்தத்தின் அளவையும், ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள சிவப்பு கொய்யா அருமருந்தாக பயன்படுகிறது.

வயது முதிர்வால் பார்வைத்திறன் குறைபாடு ஏற்படுவதை தவிர்க்கும் ஆற்றல் சிவப்பு கொய்யாவிற்கு உண்டு.சிவப்பு கொய்யாவின் சிறப்பு பலன்கள்!

இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் இதயத்தை நல்ல ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

மருத்துவ ஆராய்ச்சிகளின் படி புற்றுநோய் செல்களை வளராமல் தடுக்கும் ஆற்றலும் சிவப்பு கொய்யாவிற்கு உண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது.

இருப்பினும் கொய்யா பழத்தினை ஏதேனும் பிரச்சனைக்காக நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு சாப்பிடுவது நல்லது.

MUST READ