Homeசெய்திகள்ஆண்களே இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

ஆண்களே இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

-

ஆண்களுக்கு தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்களை பற்றி தெரிந்து கொள்வோம்.ஆண்களே இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

வீட்டில் வேலை செய்யும் பெண்களாக இருந்தாலும் சரி வெளியில் சென்று வேலை செய்யும் பெண்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல ஆண்களுக்கும் சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதில்லையாம். ஏனென்றால் இன்றுள்ள காலகட்டத்தில் ஆண்கள் பலரும் நைட் ஷிப்ட் வேலை பார்க்கிறார்கள். அப்போது துரித உணவுகளை வாங்கி சாப்பிடுவதனால் மாரடைப்பு போன்ற பல நோய்கள் உண்டாகிறது. எனவே என்னென்ன ஊட்டச்சத்துக்கள் தேவை என்பதை தெரிந்து கொண்டு அந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

முதலில் அனைவருக்கும் வைட்டமின் டி தேவைப்படுகிறது. இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

அடுத்ததாக வைட்டமின் ஏ, சி, ஈ போன்றவை அவசியம். இவை அனைத்தும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடி நம்மை நோய் கிருமிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.ஆண்களே இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!

எலும்புகளின் வலிமைக்கு வைட்டமின் கே மிக முக்கியமான ஊட்டச்சத்தாகும். இது இதய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை முக்கியமான சத்துக்கள் ஆகும். இது உயர் ரத்த அழுத்தம், தலைவலி, தசைப்பிடிப்பு, இதய நோய்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவும்.

வைட்டமின் பி12 என்பது வயதான ஆண்களுக்கு கட்டாயம் தேவை என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

அடுத்ததாக மீன் எண்ணெயினை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும். இருப்பினும் உங்கள் மருத்துவரிடம் ஒருமுறை ஆலோசனை பெற்ற பிறகு என்னென்ன ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதைப் பின்பற்றுவது மிகவும் சிறந்தது.

MUST READ