மினி பாதாம் பர்பி செய்ய தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு – 100 கிராம்
சர்க்கரை – 125 கிராம்
ரோஸ் எசன்ஸ் – சில துளிகள்
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – 1 ஸ்பூன்
அலங்கரிக்க – சில்வர் பேப்பர்
செய்முறை:
முதலில் பாதாமை ஊற வைக்க வேண்டும். அரை கப் பாலுடன் அரைத்து ஊற வைக்கலாம். அப்படி ஊற வைத்தால் கூடுதல் சுவை கிடைக்கும்.
குறிப்பு : தோல் நீக்கப்பட்ட பாதாமை அரைத்துக் கொள்ள வேண்டும். பாதாமை அரை மணி நேரம் சூடான தண்ணீரில் ஊற வைத்தால் அதன் தோல்களை எளிதில் நீக்கி விடலாம்.
பாதாமை பவுடராகவோ அல்லது பால் சேர்த்து பேஸ்ட்டாகவோ வைத்துக் கொள்ளலாம்.
இப்போது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கால் கப் அளவு சர்க்கரை போட்டு கலக்க வேண்டும். சர்க்கரை கரைந்ததும் ரோஷன் சேர்த்து அரைத்து வைத்துள்ள பாதாம் பவுடர் அல்லது பாதாம் பேஸ்ட் சேர்த்து கைவிடாமல் கிளறி விட வேண்டும். இப்போது ஒரு சிட்டிகை அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
பாதாமை கிளறி விடும்போது சுருண்டு வரும் அப்போது அடுப்பில் இருந்து இறக்கி இரண்டு அல்லது மூன்று முறை கிளறி விட வேண்டும். பின்னர் நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தி சில்வர் பேப்பர் ஒட்டி ஒரு மணி நேரம் அப்படியே ஆறவிட வேண்டும்.
ஒரு மணி நேரத்திற்கு பிறகு விருப்பமான வடிவில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளலாம்.
இப்போது அருமையான மினி பாதாம் பர்பி தயார்.