Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்காலை உணவுடன் இதை கட்டாயம் சேர்த்துக்கோங்க!

காலை உணவுடன் இதை கட்டாயம் சேர்த்துக்கோங்க!

-

இன்றைய காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கங்களில் மாறுபாட்டால் பலருக்கும் இளம் வயதிலேயே மாரடைப்பு, நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பிரச்சனைகள் உண்டாகிறது. காலை உணவுடன் இதை கட்டாயம் சேர்த்துக்கோங்க!அதாவது நாம் தினமும் உண்ணும் உணவுடன் காய்கறி, பழங்கள் மற்றும் பயறு வகைகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எடுத்துக்காட்டாக காலையில் இரண்டு இட்லி சாப்பிடுகிறோம் என்றால் அதனுடன் அரை கை அளவு காய்கறிகள், அரை கை அளவு பருப்பு அல்லது பயறு வகைகள் சேர்த்து சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடும் போது ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்காமல் கட்டுக்கோப்பாக வைத்திருக்கலாம். அது மட்டும் இல்லாமல் நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

குறிப்பாக காலை உணவு என்பதை தவிர்க்கக்கூடாது என்று சொல்லப்படுகிறது. அதிலும் காலை உணவை எளிதில் செரிமானம் அடையும் உணவுகளுடன் எடுத்துக் கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். காலை உணவு என்பது அந்த நாள் முழுவதும் நம்முடைய செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மென்மையாகத் தொடங்க வழிவகை செய்கிறது. காலை உணவுடன் இதை கட்டாயம் சேர்த்துக்கோங்க!இதன் காரணமாகவே காலை உணவில் பீட்ரூட், ஆப்பிள், வாழைப்பழம், சர்க்கரை வள்ளி கிழங்கு, பப்பாளி, பிரக்கோலி போன்றவைகளை சேர்த்துக் கொள்வது நல்லது. இதையே தினமும் பின்பற்றினால் பல பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபடலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அத்துடன் ஒவ்வொரு வேலையும் சாப்பிட்ட பின் சீரகத் தண்ணீர் குடிப்பதும் செரிமானத்திற்கு உதவுகிறது. எனவே நீங்களும் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு தவறாமல் காலை உணவில் மேலே சொல்லப்பட்ட பல வகைகளையும் காய்கறி வகைகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

MUST READ