Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்நரம்புகளை வலுவாக்கும் நாயுருவி மூலிகை!

நரம்புகளை வலுவாக்கும் நாயுருவி மூலிகை!

-

- Advertisement -

நரம்புகளை வலுவாக்கும் நாயுருவி மூலிகை!நாயுருவி என்பது அனைத்து விதமான சூழ்நிலையிலும் வளரக்கூடியது. இவற்றின் இலைகள் முட்டை வடிவத்தில் இருக்கும். தண்டுகள் பட்டையாக இருக்கும். மலர்கள் சிறியதாகவும் மலர்க்கொத்து நீண்டதாகவும் காணப்படும்.

இந்த நாயுருவி மூலிகைக்கு காஞ்சரி சரமஞ்சரி, மாமுனி, நாயரஞ்சி, செந்நாயுருவி, படருருக்கி போன்ற பல பெயர்கள் உண்டு. இலை மட்டும் அல்லாமல் வேர்களுக்கும் தனித்துவமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. நாயுருவி இலைகள் நரம்புகளை வலுப்படுத்தும். சிறுநீரை பெருக்கும். காய்ச்சலை தடுக்கும். வெள்ளைப் படுதல், கழிச்சல் போன்றவற்றை குணமாக்கும்.

நாயுருவி வேரினை கழுவி சுத்தம் செய்து வெயிலில் நன்கு காய வைத்து, அதனை அரைத்து தூளாக்கிக் கொள்ள வேண்டும். இந்த தூளை பயன்படுத்தி பல் துலக்கலாம்.

10 கிராம் நாயுருவி இலைகளை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் 10 மில்லி லிட்டர் நல்லெண்ணையை சேர்த்து பசையாக்கிய இலைகளை குழப்பி சாப்பிட வேண்டும். இவ்வாறு காலை, மாலை என இரு வேளைகளில் செய்து வர ரத்தம் மூலம் குணமடையும். இதனை தொடர்ந்து பத்து நாட்கள் வரை சாப்பிட வேண்டும்.நரம்புகளை வலுவாக்கும் நாயுருவி மூலிகை!

நாயுருவி வேர் தூள், ஒரு கிராம் அளவில் எடுத்துக் கொண்டு அதனை வெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வர உடல் வலுவாகும்.

நாயுருவி வேர் அல்லது இலைகளை அரைத்து நன்கு பசையாக்கிக் கொண்டு அதனை மேல் பூச்சாக பூசி வர சிரங்கு போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

இம்முறைகளை ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்தவித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம். இல்லை எனில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

MUST READ