நேந்திரம் காய் கஞ்சி தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
நேந்திரம் காய் – 100 கிராம்
பால் – 100 மில்லி லிட்டர்
தண்ணீர் – 100 மில்லி லிட்டர்
செய்முறை:
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் அளவை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் நேந்திரம் காய்களை நன்கு வெயிலில் காய வைக்க வேண்டும். பின் காய வைத்த நேந்திரம் காய்களை எடுத்து அதனை இடித்து பொடியாக்கி கொள்ள வேண்டும். பிறகு இந்த பொடியை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது 100 மில்லி லிட்டர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். அத்துடன் 100 மில்லி லிட்டர் பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
அதன் பின் இரண்டு தேக்கரண்டி அளவு நேந்திரம் காய் பொடியை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில், நீரானது கஞ்சித் தன்மைக்கு வரும் வரை காய்ச்ச வேண்டும்.
இப்போது நேந்திரம் காய் கஞ்சி தயார்.
இந்த கஞ்சியை தினமும் காலை வேலைகளில் குடித்து வர எலும்புகள் வலுப்பெற்று உடல் எடை அதிகரிக்கும்.
இருப்பினும் இம்முறையை பின்பற்றுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.