Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்இனி வீடு, வாகனக் கடன் இஎம்ஐ குறையும்... ரிசர்வ் வங்கியின் அட்ராசக்கை அறிவிப்பு..!

இனி வீடு, வாகனக் கடன் இஎம்ஐ குறையும்… ரிசர்வ் வங்கியின் அட்ராசக்கை அறிவிப்பு..!

-

- Advertisement -

2 மாதங்களுக்கு ஒருமுறை கூடும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டம் இன்று கூடியது. இதில் ஒருமனதாக கடனுக்கான வட்டிவீதம், ரெப்போ ரேட்டை 6.50 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைக்க முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

இதன் மூலம் வீட்டுக்கடன், வாகனக் கடன், தொழிலுக்காக வாங்கிய கடன் ஆகியவற்றுக்கு செலுத்தும் மாதாந்திர இஎம்ஐ அளவு குறையும். ரிசர்வ் வங்கி அறிவிப்பை ஏற்று வங்கிகள் எந்த அளவுவட்டியைக் குறைக்கும் என்பது வரும்நாட்களில் தெரியும். கடைசியாக கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் நடந்த நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வட்டிவீதம் குறைக்கப்பட்டது, அதன்பின் இப்போதுதான் வட்டிவீதம் 25 புள்ளிகள் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. கடந்த 11 எம்பிசி கூட்டங்களிலும் கடனுக்கான வட்டிவீதம் மாற்றாமல் இருந்தநிலையில் முதல்முறையாக குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டு நுகர்வோர் செலவிடுவதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளநிலையில், தற்போது ரிசர்வ் வங்கியும் வட்டிவீதத்தைக் குறைத்துள்ளது. இதன் மூலம் கடன்பெறுவதும் இலகுவாக்கப்பட்டு, செலவிடுவதற்கும், முதலீடு செய்வதையும் ஊக்கப்படுத்தி பொருளாதார சுழற்ச்சியை வேகப்படுத்து ரிசர்வ் வங்கி ஊக்கப்படுத்தியுள்ளது.

பொருளாதரத்தில் பணப்புழக்கத்தை அதிகப்படுத்த கடந்த டிசம்பரில் நடந்த நிதிக்கொள்கைக் கூட்டத்தில் வங்கிகள் வைத்திருக்கும் ரொக்கக் கையிருப்பு வீதத்துக்கான வட்டியை 50 புள்ளிகள் வரை ரிசர்வ் வங்கி குறைத்து 4 சதவீதமாக மாற்றியது. இதன் மூலம் கடன் வழங்குவது அதிகரிக்கும், மக்கள் முதலீட்டில் ஆர்வம்காட்டுவார்கள் என்று நம்பப்பட்டது.

பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டிலிருந்து எதிர்பார்த்த அளவு இல்லை. ரிசர்வ் வங்கி திருத்தப்பட்ட அறிக்கையும், முன்கணிப்பையும் மாற்றி வெளியிட வேண்டிய நிலை இருந்தது. நடப்பு 2024-25 நிதியாண்டில் ரிசர்வ் வங்கி விடுத்த அறிக்கையில் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம் வரை வளரக்கூடும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால், பல்வேறு பொருளாதாரக் காரணிகள் மந்தநிலையில் இருப்பது, முதலீட்டில் மந்தநிலை, பணவீக்கம் உயர்வு, அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் சுணக்கம் ஆகியவற்றால் பொருளாதார வளர்ச்சியை 6.4 சதவீதமாகக் குறைத்து, பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பொருளாதாரத்தில் தேக்கநிலை, வளர்ச்சியில் மந்தநிலை இருப்பதை பொருளாதார வல்லுநர்கள் மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ளதால், மத்தியபட்ஜெட்டில் சாமானிய மக்களையும், நடுத்தரக் குடும்பத்தினரையும் செலவு செய்ய ஊக்கப்படுத்தும் வகையில், சேமிப்பு, முதலீட்டை ஊக்கப்படுத்தும் வகையில் வருமானவரி விலக்கு தொகை ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது.இதனிடையே 2025-26ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதம் இருக்கும் என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

MUST READ