Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஆயுளை கூட்டும் நட்ஸ் வகைகள்!

ஆயுளை கூட்டும் நட்ஸ் வகைகள்!

-

பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடுவதனால் ஆயுள் பெருகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது இது போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடுவதனால் புற்றுநோய் உண்டாவது தடுக்கப்படுகிறதாம்.ஆயுளை கூட்டும் நட்ஸ் வகைகள்! அடுத்தது இதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதும் குறைவதாக சொல்லப்படுகிறது. நாம் நட்ஸ் வகைகளை எந்த அளவிற்கு எடுத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம் ஆயுள் காலமும் அதிகரிக்கும் என்று ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.ஆயுளை கூட்டும் நட்ஸ் வகைகள்!

குறிப்பாக வால்நட் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அதாவது வால்நட் என்பது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட உயர்தர பருப்பு வகைகளில் ஒன்றாகும். இது மூளையின் செயல்பாட்டுக்கு பெரும் துணையாக இருக்கிறது. வால்நட் பார்ப்பதற்கும் மூளை வடிவத்தில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையினால் குழந்தைகளும் பெரியவர்களும் வால்நட்ஸ் சாப்பிடுவது நல்லது. கர்ப்பிணி பெண்கள் வால்நட்ஸ் சாப்பிடுவதனால் வயிற்றில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

மேலும் வால்நட் சாப்பிடுவது எலும்புகள், பற்கள் போன்றவற்றை பலப்படுத்தும். அத்துடன் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.

ஆயுளை கூட்டும் நட்ஸ் வகைகள்!

அடுத்தது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் பயன்படுகிறது. எனவே அதிகமாக தினமும் 5 வால்நட்ஸ்களை சாப்பிட்டால் நம் நினைவாற்றலும் அதிகரிக்கும். இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும். ஆகையினால் நீங்களும் வால்நட் சாப்பிடுங்கள். அதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ