Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் ஆரஞ்சு பழங்கள்!

சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் ஆரஞ்சு பழங்கள்!

-

- Advertisement -

ஆரஞ்சு பழங்கள் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க உதவுகிறது.சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் ஆரஞ்சு பழங்கள்!

ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி இருப்பது அனைவரும் அறிந்ததே. இது தவிர ஆரஞ்சு பழத்தில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, புரோட்டின், வைட்டமின்கள் ஏ, பி 6 போன்றவையும் அடங்கியுள்ளன. அதாவது ஆரஞ்சு பழங்களில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் ஆகியோர் அனைவரும் ஆரஞ்சு பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த ஆரஞ்சு பழமானது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து ரத்தக்குழாய்களில் சேரும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. அதுபோல இது உடல் எடையையும் குறைக்க உறுதுணையாக இருக்கிறது. மேலும் ஆரஞ்சு பழங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சருமத்தினை பொலிவாக்கவும் பயன்படுகிறது. சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் ஆரஞ்சு பழங்கள்!அடுத்தது இது செரிமான பிரச்சனையை சரி செய்யவும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கவும் உதவுகிறது. இது தவிர தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தினை எடுத்துக் கொள்வதனால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் 50 சதவீதம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இது சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மையுடையது. எனவே தினமும் ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ