Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்மக்களே உஷார் ...... செயற்கை நிறமியால் உயிருக்கே ஆபத்து!

மக்களே உஷார் …… செயற்கை நிறமியால் உயிருக்கே ஆபத்து!

-

இன்றைய அவசர காலகட்டத்தில் துரித உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. அதேசமயம் திரும்பும் திசை எல்லாம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக வண்ணமயமான உணவுப் பொருட்கள் எங்கும் நிறைந்துள்ளன. மக்களே உஷார் ......செயற்கை நிறமியால் உயிருக்கே ஆபத்து!இப்போதெல்லாம் எல்லாவற்றிற்கும் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுகின்றன. புதினா ரசம் பச்சையாக இருப்பதற்கு, பீட்ரூட்டின் கலருக்கு, ஐஸ்கிரீம்கள், மிட்டாய்கள், அப்பள வகைகள் என அனைத்திலும் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.மக்களே உஷார் ......செயற்கை நிறமியால் உயிருக்கே ஆபத்து!மேலும் பானி பூரி, சிக்கன் கபாப் உள்ளிட்ட பல உணவுப்பொருட்களில் அதிக அளவிலான செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பஞ்சுமிட்டாயில் கூட செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டதால் அதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கும் காரணத்தால் சமீபத்தில் கூட பஞ்சுமிட்டாயை தமிழ்நாட்டில் தடை செய்தனர். மேலும் கர்நாடகாவிலும் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்பட்டால் லட்சக்கணக்கில் அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.மக்களே உஷார் ......செயற்கை நிறமியால் உயிருக்கே ஆபத்து! இந்த செயற்கை நிறமிகளில் சன்செட் யெல்லோ, கார்மோசின், டெட்ராசைன் போன்ற வேதிப்பொருட்கள் இருக்கிறது. இது அனைவருக்கும் புற்றுநோயை உண்டாக்கும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. எனவே உங்களுக்கோ, உங்கள் குழந்தைகளுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தினருக்கோ தெரிந்தோ தெரியாமலோ துரோகம் செய்து விடாதீர்கள். செயற்கை நிறமிகளின் அபாயத்தை உணர்ந்து அதனை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.

MUST READ