Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ராஜ்மா பிரியாணி.... சிம்பிளான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!

ராஜ்மா பிரியாணி…. சிம்பிளான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!

-

ராஜ்மா பிரியாணி செய்வது எப்படி?

ராஜ்மா பீன்ஸில் அதிக அளவில் புரோட்டின் இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். தற்போது ராஜ்மா பீன்ஸ் பயன்படுத்தி பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.ராஜ்மா பிரியாணி.... சிம்பிளான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!

தேவையான பொருள்கள்:

ராஜ்மா பீன்ஸ் – 100 கிராம்
அரிசி – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 2
இஞ்சி- பூண்டு விழுது – 1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, கல்பாசி – (தலா 2 துண்டுகள்)
கொத்தமல்லி, புதினா -தேவையான அளவு
தயிர் – 2 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:ராஜ்மா பிரியாணி.... சிம்பிளான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!

100 கிராம் ராஜ்மா பீன்ஸ் எடுத்து அதனை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அடுத்தது ராஜ்மா பீன்ஸ் நன்கு ஊறிய பின்னர் அதை குக்கரில் சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். அதேசமயம் சீரக சம்பா அரிசியை நன்கழுவி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வேறொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி, அன்னாசிப்பூ ஆகியவற்றை சேர்த்து தாளித்து நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும்.

அதன் பின்னர் இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி- பூண்டு வாசனை போன பின்னர் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கிய பிறகு கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். அத்துடன் கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். அதைத்தொடர்ந்து இரண்டு ஸ்பூன் அளவு தயிர் சேர்த்து வதக்க வேண்டும்.

இப்போது அரிசி மற்றும் வேக வைத்த ராஜ்மா பீன்ஸ் சேர்த்து கிளறி விட வேண்டும். ஒரு கப் அளவு அரிசிக்கு இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். ராஜ்மா பிரியாணி.... சிம்பிளான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி!ராஜ்மாவை வேகவைத்த தண்ணீர் இருந்தால் அதையும் சேர்த்து இரண்டு கப் அளவாக ஊற்ற வேண்டும். இப்போது மூடி போட்டு 20 நிமிடங்கள் வேக வைத்து இறக்க வேண்டும். தேவைப்பட்டால் இறுதியில் நெய் சேர்த்து கிளறிவிட்டு சூடாக பரிமாறலாம்.

கமகமக்கும் ராஜ்மா பீன்ஸ் பிரியாணி ரெடி. நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்.

MUST READ