இந்த வருஷம்தான் நல்லா இல்ல… அடுத்த வருஷமாவது விடிவு கிடைக்கும் எனக் காத்திருக்கிறார்கள் பலரும். இந்தப் புத்தாண்டாவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
ஆண்டின் ஆரம்பம் நன்றாக இருக்கட்டும். செல்வத்திற்கு ஒருபோதும் குறைவில்லாமல் இருக்க வேண்டும் என புத்தாண்டில் மக்கள் பல எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். ஜோதிடத்திலும் புத்தாண்டுக்கான பல தீர்வுகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இது தவிர, உங்கள் ஆண்டின் ஆரம்பம் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
புத்தாண்டின் முதல் நாளில் சில விஷயங்களைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானதாகவும், நன்மையாகவும் கருதப்படுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் இதுபோன்ற சில விஷயங்களை நீங்களும் கண்டால், உங்களுக்கு 2025ம் ஆம் ஆண்டு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். ஆண்டு முழுவதும் உங்களுக்கு பணத்திற்கு பஞ்சம் இருக்காது.
புத்தாண்டின் முதல் நாள் காலையில் கண்களைத் திறந்தவுடன், சங்கு சத்தம் அல்லது கோவில் மணி அடிக்கும் சத்தம் கேட்பது மிகவும் நல்ல அறிகுறி. கோவிலில் வழிபாட்டின் போது இந்த இரண்டு சத்தமும் கேட்கும். காலையில் பறவையின் சத்தம் கேட்பதும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
புத்தாண்டின் முதல் நாளில் உங்கள் வீட்டில் பறவைக் கூடு இருப்பதைப் பார்த்தால், அது சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான அறிகுறி. ஒரு பறவை கூடு கட்டுவதை நீங்கள் கண்டால், அது நல்ல செய்தியைப் குறிக்கிறது. அப்படி கூடு கட்டி இருந்தால் அந்தக் கூட்டை வீட்டிலிருந்து அகற்றுவதற்குப் பதிலாக, பாதுகாப்பான இடத்தில் வைக்கவும்.
புத்தாண்டின் முதல் நாளில் உங்கள் கனவில் தங்கம், வெள்ளி, பணம் வந்தால் அது மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. நீங்கள் விரைவில் பணம் சம்பாதிக்கப் போகிறீர்கள் என்பதை இது உணர்த்துகிறது.
புத்தாண்டின் முதல் நாளில் வீட்டை விட்டு வெளியேறும்போது, கோயிலில் வழிபாடு, ஏதேனும் மத சடங்குகள் செய்யப்படுவதை நீங்கள் கண்டால், அது ஒரு சுப அறிகுறி. உங்கள் காரியம் தடையின்றி வெற்றியடையும், கடவுளின் ஆசீர்வாதத்தைப் பெறப் போகிறீர்கள் என்று அர்த்தம்.
இது தவிர, புத்தாண்டின் முதல் நாளில் அதிகாலையில் வெள்ளை பூக்கள் அல்லது யானைகளைக் கண்டால், அது மகிழ்ச்சியின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. புத்தாண்டின் முதல் நாளில் வெள்ளைப் பூவோ, யானையோ தென்பட்டால், புத்தாண்டில் லட்சுமி தேவியின் அருள் பொழியும் என்பது ஐதீகம்.